சீனாவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
பதிவு : அக்டோபர் 13, 2021, 08:16 PM
அருணாச்சல் பிரதேசம், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அன்னியபடுத்த முடியாத பகுதி என, சீனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு கடந்த வாரம் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அன்னிய படுத்த முடியாத பகுதி என தெரிவித்துள்ளார். அவர் மற்ற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை போல அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறியுள்ள  தற்போதைய சூழ்நிலையை விரைந்து தீர்க்க சீனா பணியாற்ற வேண்டுமென இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். தேவையற்ற விவகாரங்களை தொடர்பு படுத்தாமல் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை சீனா கடைபிடிக்க வேண்டும் எனவும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

46 views

இடியுடன் கூடிய பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

18 views

இந்திய ராணுவ தளபதி இலங்கை பயணம் - இலங்கை பிரதமர், அதிபரை சந்திக்க உள்ளார்

இந்திய ராணுவத் தளபதி முகுந்த் நரவானே அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார்.

13 views

பிற செய்திகள்

கேரளாவை உலுக்கிய உத்ரா மரணம் - பாம்பாட்டியிடம் பேசி ஆதாரங்களை சேகரித்த போலீஸ்

பாம்பை விட்டு மனைவி உத்ராவை கொலை செய்த வழக்கில் கேரள போலீசாரின் தீவிர விசாரணையே இப்போது சூரஜை குற்றவாளி என உறுதி செய்து தண்டனை பெற்றுத்தர வைத்திருக்கிறது.... இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்....

157 views

"மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை" - தீர்ப்பு குறித்து உத்ராவின் தாய் வேதனை

மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என, உத்ராவின் தாய் மணிமேகலா தெரிவித்துள்ளார்.

189 views

பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவன் - ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கொடிய விஷப்பாம்பை ஏவி மனைவியை கொடூரமாக கொலை செய்த சூரஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

17 views

உத்தரபிரதேச வன்முறை சம்பவம் - குடியரசு தலைவருடன் காங். குழு சந்திப்பு

உத்தரபிரதேச வன்முறை சம்பவத்தில் நேர்மையான விசாரணை நடத்த கோரி, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்தினர்.

9 views

கனமழையால் சேதம் அடைந்த குடியிருப்பு - ஆபத்தான நிலையில் இருந்த குடியிருப்பு இடிப்பு

பெங்களூருவில் மழையால் சேதமடைந்த குடியிருப்பை மாநகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

12 views

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் - திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல்

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக அந்த மாநில திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.