உத்தரபிரதேச வன்முறை சம்பவம் - குடியரசு தலைவருடன் காங். குழு சந்திப்பு
பதிவு : அக்டோபர் 13, 2021, 04:01 PM
உத்தரபிரதேச வன்முறை சம்பவத்தில் நேர்மையான விசாரணை நடத்த கோரி, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்தினர்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்த கோரி ராகுல் காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். இந்தக் குழுவில் பிரியங்கா காந்தி, ஏ.கே.ஆண்டனி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் குடியரசு தலைவரை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பிற செய்திகள்

கர்வா செளத் பண்டிகை கொண்டாட்டம் - ஒன்றாக கூடி பூஜைகளை செய்த பெண்கள்

டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர்.

9 views

"ஷாருக் கான் பாஜகவில் இணைந்தால் போதும்" - மகாராஷ்டிர அமைச்சர் விமர்சனம்

இந்தி நடிகர் ஷாருக் கான் பாஜகவில் இணைந்தால், போதைப் பொருள் கூட சர்க்கரைத் தூளாக மாறிவிடும் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால் விமர்சித்து உள்ளார்.

8 views

82வது மனதின் குரல் நிகழ்ச்சி - வானொலியில் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி

பண்டிகை நாட்களில் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி, அவர்களின் வாழ்வில் ஒளி வீசச் செய்ய வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

9 views

கெஸ்ட்ஹவுஸில் இருந்து 28 கேமராக்கள் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

கேரளா மாநிலத்தில் நிதி மோசடி வழக்கில் கைதான மோசான் மாவுங்கலின், கெஸ்ட் ஹவுஸ் படுக்கையறை மற்றும் மசாஜ் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுளளது.

9 views

பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள வட கொரியா; 1.5 ஆண்டுகளாக எல்லைகள் மூடல் - ஐ.நா சிறப்பு ஆய்வாளர் எச்சரிக்கை

வட கொரியா, கடுமையான உணவுப் பற்றாகுறையை எதிர் கொண்டுள்ளதாக ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

6 views

லித்தியம் அயர்ன் பேட்டரிகள் பற்றாக்குறை - பேட்டரிகளில் இயங்கும் மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள் இயங்க தேவையான லித்தியம் ஐயான் பேட்டரிகளுக்கு இந்தியாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.