64 இலங்கை அகதிகள் வெளியேறினர்: அகதிகள் விஷயத்தில் தீர்வுதான் என்ன...?
பதிவு : அக்டோபர் 10, 2021, 09:53 AM
தமிழக முகாம்களிலிருந்து வெளியேறி 64 இலங்கை அகதிகள் நடுக்கடலில் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இலங்கை அகதிகள் விஷயத்தில் தீர்வுதான் என்ன...? அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள் கூறுவது என்ன..? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
இலங்கை உள்நாட்டு போரின் போது அகதிகளாக புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் சென்னை, திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள 109 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தங்கியிருந்த 64 அகதிகள் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியானது. 

கேரளா சென்று படகு வாயிலாக இலங்கைக்கு தப்பி சென்ற அவர்கள், அங்கிருந்து மேலும் 20 தமிழர்களை அழைத்துக்கொண்டு கனடாவை நோக்கி சென்றுள்ளனர். மாலத்தீவு வழியாக தென் ஆப்பிரிக்கா சென்று அங்கிருந்து கனடா  செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

ஆனால் அப்போது கடல் கொந்தளிப்பு மற்றும்  வானிலை மாற்றம் காரணமாக படகு மாலத்தீவு, மொரிஷியஸ் இடையே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

படகு, அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருக்கும் தியேகோ, கார்சியா தீவுக்கு சென்றுவிட்டதாகவும், அவர்களை அமெரிக்க கடற்படை கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே முகாம்களில் விசாரித்து வரும் கியூ பிரிவு போலீசார், தமிழகத்தில் இருந்து வெளியேறிய அகதிகள் யார் என அடையாளம் காண இன்டர்போல் உதவியை நாடியிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், முகாம்களில் எந்தஒரு வசதியும் இல்லாத நிலையில், வாழ்வாதாரம் தேடி பயணிக்கும் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

129 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

75 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

66 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

39 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

33 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

21 views

பிற செய்திகள்

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

21 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

11 views

சர்வதேச பலூன் திருவிழா - "அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்"

சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

28 views

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.