ரசிகர்களை மயக்கிய பிறைசூடன் பாடல்கள் = சோகத்தில் ஆழ்ந்த இசை ரசிகர்கள்
பதிவு : அக்டோபர் 09, 2021, 02:48 AM
சினிமா பாடல் ஆசிரியரும் கவிஞரும் ஆன பிறை சூடன் மாரடைப்பால் காலமானார். காதல், சோகம், என பல்வேறு உணர்வுகளை பாடல்களால் வடித்த கவிஞர் பிறைசூடன் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.....
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக, கவிஞர் பிறைசூடன் காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள  நல்லமாங்குடியில் பிறந்தவர் பிறைசூடன். இவரது இயற்பெயர் சந்திரசேகரன். காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜ் மற்றும் தனலட்சுமி  தம்பதியினருக்கு 1956 ஆம் ஆண்டு மூத்த மகனாகப் பிறந்தவர். பிறைசூடன்....தமிழ் மீது ஆர்வம் கொண்டதால் சந்திர சேகரன் என்ற பெயரை பிறைசூடன் என மாற்றி கொண்டுள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு, சிறை என்னும் படத்தில், ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானார் பிறைசூடன். இதனையடுத்து ராஜாதி ராஜா படத்தில் அவர் எழுதிய மீனம்மா மீனம்மா பாடல் பெரும் வரவேறப்பை பெற்றது.பிறகு, 'பணக்காரன்' படத்தில் 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' என்னும் வாழ்த்துப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இயக்குநர் வசந்த் இயக்கிய 'கேளடி கண்மணி'யில் 'தென்றல் தான் திங்கள்தான்' என்னும் பாடல், ஈரமான ரோஜாவேயில் கலகலக்கும் மணி ஓசை. என காதல் பாடல்கள் இளைஞர்களை வசப்படுத்தியது. காதல் கவிதைகள் படித்திடும் நேரம், என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி ஆகிய பாடல்கள் காதல் மனங்களை சுண்டி இழுத்தன.இளையராஜாவின் இசையில் இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.இது மட்டுமின்றி தத்துவம் சோகப்பாடல்களும் இவரது கற்பனை திறனுக்கு எடுத்துக்காட்டாகும். ராசாவின் மனசிலே படத்திற்காக சோலை பசுங்கிளியே என்ற பாடலுக்காக 1991ஆம் ஆண்டும், பிறகு 1996 ஆம் ஆண்டும் தமிழக அரசின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதை பிறைசூடனுக்கு பெற்று தந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு சிறு சிறு வரிகள் எழுதி கொடுத்த பிறைசூடன் பின்பு, ஸ்டார் படத்தில் 'ரசிகா ரசிகா என்ற பாடலை எழுதினார். இதுவும் இசை ரசிகர்களை கொள்ளை கொண்டது.காதலுக்கு மட்டுமல்ல காதல் தோல்விக்கு அவர் எழுதிய இதயமே இதயமே பாடல் கல்லையும் கரைய வைக்கும். திரைப்படங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதிய பிறைசூடன், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார். அவரது மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

804 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

156 views

உ.பி.யில் பயங்கரம் : நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை

உத்திரபிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

82 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

40 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

21 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் வெளியீடு

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் இருந்து 'மருதாணி' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 'மாநாடு'

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

121 views

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தின் முதல் பாடல்: இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ஜெய் பீம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

299 views

அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தின் 3ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

464 views

விஷால் நடிப்பில் உருவாகும் 'லத்தி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு லத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

17 views

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா - சிறந்த இந்திய திரைப்படமாக 'கர்ணன்' தேர்வு

பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டன.

1279 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.