2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு - பத்திரிகையாளர்கள் இருவருக்கு அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 09, 2021, 02:13 AM
பத்திரிகையாளர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதாக, நோபல் குழு அறிவித்துள்ளது. அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
2021ஆம் ஆண்டின், அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ரெஸ்ஸா Maria Ressa மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முரட்சோவ் Dmitry Muratov ஆகிய பத்திரிகையாளர்கள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜனநாயகம் மற்றும் அமைதிக்கு அடித்தளமாக விளங்கும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க, துணிச்சலான முயற்சிகளை எடுத்ததற்காக, இவ்விருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது.ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முரட்சோவ், நொவாயா கசேட்டா என்ற ரஷ்ய நாளிதழின் தலைமை செய்தி ஆசிரியராக பணிபுரிந்தவர். பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி, சுதந்திரக் கொள்கையை விட்டுக் கொடுக்காமல், பத்திரிகையாளர் சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மரியா ரெஸ்ஸா, சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசிய புலனாய்வு செய்தியாளராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். மேலும், ராப்லெர் என்ற டிஜிட்டல் ஊடக நிறுவனத்தின் ஆசிரியராகவும், துணை நிறுவனராகவும் இருக்கிறார்.பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், சர்வாதிகாரம், வன்முறை போன்றவற்றை துணிச்சலுடன் வெளிப்படுத்தியதற்காக, நோபல் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

804 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

156 views

உ.பி.யில் பயங்கரம் : நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை

உத்திரபிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

82 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

40 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

21 views

பிற செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் தொடர் - பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றம்

கிரீஸ் நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறுக்கிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் என்ன?

6 views

வட கொரிய இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95-வது ஆண்டு விழா - கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் கொண்டாட்டம்

வட கொரியாவில் இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95-வது ஆண்டு விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

9 views

மன அழுத்தமா.. கவலை வேண்டாம்.."சோகமா இருந்தா ரூம் போட்டு அழலாம்" - ஸ்பெயினில் மன இறுக்கம் போக்க புது முயற்சி

மன அழுத்தத்தில் சிக்கித் தவிப்பவர்களுகளின் பாரத்தைக் குறைக்க ஸ்பெயின் நாட்டில் "க்ரையிங் ரூம்" என்ற அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

127 views

ரஷ்யா-சீனா கூட்டுக் கடற்படை பயிற்சி: ஜப்பான் கடலில் நடைபெற்ற பயிற்சி

ரஷ்யாவும் சீனாவும் ஜப்பான் நாட்டுக் கடலில் கூட்டு கடற்படை பயிற்சியை தொடங்கிய செய்தியை ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

8 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: விமான நிலையத்தை சூழ்ந்த தூசு மண்டலம்

ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் வெளிப்பட்ட தூசு மற்றும் புகை மண்டலம் விமான நிலைய செயல்பாட்டை நிலைகுலையை செய்தது.

84 views

ரோமில் நடைபெற்ற திரைப்பட விழா: ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.