பலாத்கார வழக்கில் யோகா பயிற்சியாளர் கைது - பார்ட்னர்ஷிப் யோகா என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறல்
பதிவு : அக்டோபர் 07, 2021, 01:23 AM
யோகாவில் கின்னஸ் சாதனை புரிந்த பயிற்சியாளர் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த மருத்துவ துறையில் வேலை பார்க்கும் 21 வயதான பெண், யோகா பயிற்சியாளரான யோகராஜ் என்கிற பூவேந்திரன் சிதம்பரம் என்பவரிடம் யோகா கற்றுக் கொள்ள சென்றுள்ளார். அப்போது பார்ட்னர்ஷிப் யோகா என்ற பெயரில் தன்னுடைய அந்தரங்க பகுதிகளை தொட்டு அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு யோகராஜ் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பிறந்தநாளுக்கு அந்த பெண்ணை வீட்டுக்கு வரவைத்த அவர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த இந்த சம்பவங்களை எல்லாம் வீடியோவாக பதிவு செய்த அவர், அதை காட்டி மிரட்டியே தொடர்ந்து அத்துமீறி வந்ததாக தெரிகிறது. தன்னை போல ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்த அந்த பெண், இதுகுறித்து யோகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாம்பலம் காவல் நிலையத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்தார். ஆதாரங்களுடன் அந்த பெண் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ் அப் உரையாடல்கள், வீடியோக்கள், போட்டோக்கள் என அந்த பெண் புகார் அளித்த நிலையில் போலீசார் உடனே யோகராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில் யோகராஜை போலீசார் கைது செய்தனர். பாலியல் பலாத்காரம், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யோகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. யோகா பயிற்சியாளரான யோகராஜ், 2015ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை செய்தவர். ஹாங்காங்கில் தொடர்ச்சியாக 40 மணி நேரம் யோகா பயிற்சி செய்து சாதனை படைத்த அவருக்கு பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதனிடையே பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் யோகராஜ். அவரது செல்போனில் இருந்து ஏராளமான பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிவரலாம் என தெரியவருகிறது...

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

691 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

479 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

108 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

77 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

60 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

27 views

பிற செய்திகள்

7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் "கல்விக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை" - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

8 views

"பொய்,மழுப்பல்களின் மொத்த உருவம் ஜெயக்குமார்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவம் என்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்துள்ளார்.

19 views

காகிதங்களில் வழங்கப்படும் எக்ஸ்ரே பதிவுகள் - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பதிவுகள் காகிதங்களில் வழங்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

"உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது" - பழனிகுமார், மாநில தேர்தல் ஆணையர்

ஊரக உள்ளாட்சி தேர்தல், அமைதியாக நடைபெறுவதாக கூறிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், பதற்றமான வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

27 views

அதிமுக மாவட்ட செயலரைத் தாக்கிய விவகாரம் - ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் மேல் முறையீடு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக மாவட்ட செயலாளரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.

16 views

"பட்டாசு கட்டுபாடு உத்தரவுகளை பின்பற்றுக" - உச்சநீதிமன்றம்

பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.