"பண்டோரா ஆவணம் - நடவடிக்கை எடுக்கப்படும்"
பதிவு : அக்டோபர் 05, 2021, 09:26 AM
பண்டோரா ஆவணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"பண்டோரா ஆவணம் - நடவடிக்கை எடுக்கப்படும்"

பண்டோரா ஆவணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச ஊடகவியலாளர்கள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பு, வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கியிருப்பதாக கூறி, பண்டோரா ஆவணங்கள் என்ற பெயரில் பட்டியல் வெளியிட்டது.இதில் சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, நிரவ் மோடியின் சகோதரி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக ஒரு சில இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை மட்டுமே, ஊடகங்களில் இதுவரை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த மத்திய அரசு, இதுவரை அவர்களின் விவரத்தை இணையதளத்தில் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு சம்பந்தப்பட்ட அமைப்பு, இது குறித்த தகவலை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் என மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. பண்டோரா ஆவணங்கள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தலைமையில், சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அமைப்புகள் அடங்கிய குழு மேற்பார்வை செய்யும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

"100 கோடி தடுப்பூசி முக்கிய மைல் கல்" - பிரதமர் நரேந்திர மோடி கருத்து

நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த இரவு பகலாக மத்திய அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

7 views

"முல்லைப் பெரியாறில் எவ்வளவு நீர் தேக்கலாம்?"

கேரளாவில் பருவ மழையின் போது, முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்ச அளவு நீரை தேக்குவது குறித்து ஓரிரு நாளில் மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது - ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்...?

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

11 views

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

7 views

தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினி - திரைத்துறையில் வாழ்நாள் சாதனை

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு உள்ளது

12 views

பாஜக எம்.பி என்பதால் பிரச்சனை வராது - அமலாக்கத் துறை பற்றி பா.ஜ.க எம்.பி கருத்து

பாஜக எம்.பி என்பதால், அமலாக்கத் துறையால், தனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என மகாராஷ்ட்ரா எம்.பி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.