ரூ.4.75 கோடி மோசடி வழக்கு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதிவு : அக்டோபர் 04, 2021, 07:33 PM
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராத‌மும் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராத‌மும் விதிக்கப்பட்டுள்ளது.

 
ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அன்னை இன்போடெக் என்ற நிறுவனத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அதற்கு 24 சதவீத தொகையை வட்டியாக தருவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்த நிலையில்,
 
  118 முதலீட்டாளர்களிடம் இருந்து 4 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் கிடைத்த‌து. ஆனால் அதன் பின், Card - 4 செல்லமுத்து பணத்தை திருப்பி கொடுக்காத‌ நிலையில்,  முதலீடு செய்த நபர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. Card - 5 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி செல்லமுத்து விற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  
Card - 6 மேலும் செல்லமுத்து நண்பர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி - இளைஞர் உடல் நசுங்கி பலி...

சென்னையில், அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியானார்.

81 views

பிற செய்திகள்

"நடமாடும் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நடமாடும் நெல் கொள்முதல் நிலைங்கள் மூலம், நெல் கொள்முதல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

20 views

"7.5% ஒதுக்கீடு - கட்டணம் வசூலிக்க கூடாது" - தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

7புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களிடம் எந்த வகையான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார்.

14 views

பைக் மீது கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், தொழிலாளி பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

16 views

திரையரங்கில் அதிக விலைக்கு உணவு - நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

"ஐபோன், வேலை செய்ய ரோபோ"; நகைப்பை ஏற்படுத்தும் தேர்தல் வாக்குறுதிகள்-சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில், சமூக ரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் அளித்துள்ள நிறைவேற்ற முடியாத நகைச்சுவையான வாக்குறுதிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 views

நீலகிரியில் 9 நாட்களாக போக்குகாட்டும் புலி - 10-வது நாளாக புலியை தேடி பயணம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றும் புலியை பிடிக்க, புதிய வியூகத்துடன், தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.