கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியல்
பதிவு : அக்டோபர் 04, 2021, 04:03 PM
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில், அக்டோபர் 4 காலை வரை, 90.79 கோடி தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. 65 கோடியே 98 லட்சம் பேருக்கு முதல் டோஸும், 24 கோடியே 81 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 47.81 சதவீதமாக உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 17.97 சதவீதமாக உள்ளது.

24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 10 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 36.45 சதவீதமாக உள்ளது.

12 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் இதுவரை 8 கோடியே 36 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 47.14 சதவீதமாக உள்ளது

8 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்தில், இதுவரை 6 கோடியே 39 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 55.86 சதவீதமாக
உள்ளது.

6 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், இதுவரை 6 கோடியே 14 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 65.62
சதவீதமாக உள்ளது.

10 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், இதுவரை 5 கோடியே 88 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 41.80 சதவீதமாக உள்ளது.

12 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில், இதுவரை 5 கோடியே 75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஆறாவது இடத்தில் உள்ளது.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 35.59 சதவீதமாக உள்ளது.

6 கோடியே 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், இதுவரை 5 கோடியே 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு ஏழாவது இடத்தில் உள்ளது.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 57.68 சதவீதமாக உள்ளது.

8 கோடியே 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் இதுவரை 5 கோடியே 66 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு எட்டாவது இடத்தில் உள்ளது.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 49.21 சதவீதமாக உள்ளது.

7 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், இதுவரை 4 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு ஒன்பதாவது இடத்தில் உள்ளது.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 47.13 சதவீதமாக உள்ளது.

5 கோடியே 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆந்திராவில், இதுவரை 4 கோடியே 22 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு பத்தாவது இடத்தில் உள்ளது.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 51.47 சதவீதமாக உள்ளது.

கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ள, 3.58 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில், இதுவரை 3.58 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு 11ஆவது இடத்தில்
உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 68.99 சதவீதமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு, 90,313 புதிய தொற்றுதல்கள்
ஏற்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

807 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

159 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

43 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

6 views

பிற செய்திகள்

கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை : இடுக்கி அணையில் நீர் திறப்பு - கழுகுப் பார்வை காட்சிகள்

கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இடுக்கி அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது

0 views

வெள்ளத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் - உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறை தொடக்கம்

மழை வெள்ளத்தில் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய கேரள ஓட்டுநரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறையை மோட்டார் வாகனத் துறையினர் தொடங்கி உள்ளனர்.

7 views

"33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு" - முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பு - 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுந்தர்கல் பகுதியில் சிக்கி தவித்த 25 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

15 views

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.