குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறை செயலி - சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பதிவு : அக்டோபர் 04, 2021, 02:07 PM
முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறையின் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறையின் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தலைமைச்செயலகத்தில் எப்ஆர்எஸ் செயலியின் பயன்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காவல் அலுவலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும் போது, இச்செயலியைப் பயன்படுத்தி, குற்றவாளிகள், சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியினையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.  அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும் என்றும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் குற்றவாளிகள் நடமாடினால், அவர்களை எளிதாக கண்டுபிடிக்க இயலும் எனவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

விவசாய தோட்டத்தில் மனைவியை புதைத்த கணவன் - யாருக்கும் தெரியாமல் புதைத்தது ஏன்?

சத்தியமங்கலம் அருகே மனைவி உயிரிழந்ததாக கூறி அவரின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் கணவன் புதைத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 views

பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் , நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்டங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

6 views

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக 2வது முறையாக சம்மன்

சொத்த குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

16 views

"முத்தூட் மீதான நடவடிக்கை செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்க காசுகள் சப்ளை செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5 views

முதல் முறையாக நாளை ஆளுநரை சந்திக்க உள்ள ஈபிஎஸ்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.

22 views

கிருஷ்ணகிரியில் பரபரப்பு - நகைக்காக மூதாட்டி கொலை

கிருஷ்னகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே, மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.