சொகுசு கப்பலில் போதை விருந்து - நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது
பதிவு : அக்டோபர் 03, 2021, 06:57 PM
மும்பையில் உல்லாச கப்பலில் போதை விருந்து நடத்திய விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் அதிநவீன உல்லாச கப்பல் என்ற பெருமையுடன் 2 வாரங்களுக்கு முன்பு  "எம்பிரஸ்" தனது கடல் பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை விருந்து நடப்பதாக போதை பொருள் ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தனி படகு ஒன்றில் சென்ற போலீசார், எம்பிரஸ் கப்பலில் சோதனை செய்தனர். அப்போது விருந்தில் பங்கேற்று இருந்தவர்கள் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி இருந்தது தெரிய வந்ததால், அங்கு 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில், 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  பாலிவுட் சூப்பர் ஸ்டார்  ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும்  கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து,  அனைவரையும் சிறையில் அடைப்பதற்காக, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நடவடிகைகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி - இளைஞர் உடல் நசுங்கி பலி...

சென்னையில், அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியானார்.

14 views

பிற செய்திகள்

'விக்ரம்' பட 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - கமல், விஜய் சேதுபதி, ஃபகத் நடிக்கும் 'விக்ரம்'

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

8 views

"கணவன், மனைவி உறவில் இருந்து பிரிவு" - நடிகை சமந்தா அறிவிப்பு

"கணவன், மனைவி உறவில் இருந்து பிரிவு" - நடிகை சமந்தா அறிவிப்பு

44 views

வெளியானது "மாநாடு" டிரெய்லர் - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, மாநாடு

வெளியானது "மாநாடு" டிரெய்லர் - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, மாநாடு

18 views

"அண்ணாத்த" படத்தின் முதல் பாடல் - வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல், வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

16 views

தேசிய விருது பெற்ற வாகை சூடவா திரைப்படம் - 10ம் ஆண்டு துவக்கம் கொண்டாட்டம்

தேசிய விருது பெற்ற வாகை சூடவா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் எட்டியுள்ளதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

11 views

சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படம் - நவ.2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியீடு

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம், நவம்பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.