எல்லையில் படையை குவிக்கும் சீனா - லடாக் எல்லையில் நடப்பது என்ன...?
பதிவு : அக்டோபர் 03, 2021, 11:55 AM
கிழக்கு லடாக்கில் ராணுவப் படைகளை சீனா குவித்து வருவதாக கூறியிருக்கும் ராணுவ தளபதி நரவானே, இந்திய ராணுவம் எல்லையில் கண்காணிப்பை அதிகரித்திருப்பதாகவும், எந்த ஒரு சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் ராணுவப் படைகளை சீனா குவித்து வருவதாக கூறியிருக்கும் ராணுவ தளபதி நரவானே, இந்திய ராணுவம் எல்லையில் கண்காணிப்பை அதிகரித்திருப்பதாகவும், எந்த ஒரு சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவும், சீனாவும் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தொலைவு எல்லையை பகிர்ந்துள்ளன. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கோரும் நிலையில், அந்நாட்டு ராணுவம் சிக்கிம், லடாக் எல்லையில் அவ்வப்போது இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைகிறது. அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி திரும்பிச்செல்ல செய்கிறது. இவ்வாறு கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறிய போது மோதல் வெடித்தது. அப்போது நேரிட்ட சண்டையில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. கிழக்கு லடாக்கில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்த நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த பிப்ரவரியில் படைகள் வாபஸ் பெறப்பட்டன.இந்தியா-சீனா இடையிலான எல்லை பல இடங்களில் வரையறை செய்யப்படவில்லை. இதுகுறித்த பேச்சுவார்த்தை இரதரப்பு இடையே நீண்டுக் கொண்டே செல்கிறது.இதற்கிடையே எல்லையில் ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்துவரும் சீனா, கடுமையான வானிலை நிலவும் பகுதியில் ராணுவ வீரர்களை தொடர்ந்து குவித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் சுமார் 100 சீன ராணுவ வீரர்கள் நுழைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவும், அங்கு ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வீரர்களை அங்கு குவித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் டெல்லியில் பி.எச்.டி. தொழில்வர்த்தக சபையில் பேசிய இந்திய ராணுவ தளபதி நரவானே, இருதரப்பு எல்லை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில், எல்லை பிரச்சினை தொடரும் எனக் கூறியுள்ளார்.இந்திய ராணுவம் எல்லையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருப்பதுடன், கண்காணிப்பையும் அதிகரித்துள்ளதாகவும், எந்தஒரு சவாலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் நரவானே கூறியிருக்கிறார். இதனையடுத்து லடாக் சென்ற நரவானே, கிழக்கு லடாக்கில் இந்திய படைகளின் தயார் நிலையை ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் 14-வது படைப்பிரிவு அலுவலகத்தில், அவரிடம் ஏற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

59 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

புதிய விமானநிலையம் : மத்திய அரசு திட்டம் - கேரள மாநில அரசு நிராகரிப்பு

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு பதிலாக புதிய விமான நிலையம் என்ற மத்திய அரசின் திட்டத்தை கேரள அரசு நிராகரித்துள்ளது.

8 views

குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை - மேலாளர் கொலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தேரா சச்சா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை - மத்திய அரசு விளக்கம்

சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

12 views

கொட்டும் மழையில் ருசிகர திருமண நிகழ்வு... பாத்திரத்தில் பயணித்த இளம் ஜோடி

கேரளாவில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த ருசிகர திருமண நிகழ்வை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

441 views

"பாபர் மசூதி போல், கதக் ஜூம்மாவை தகர்க்க வேண்டும்" - ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் சர்ச்சை பேச்சு

பாபர் மசூதி போல், கதக்கில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து கோயில் கட்டவேண்டும் என ஸ்ரீராம்சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

13 views

வரதட்சணையாக அளித்த நிலத்தை விற்க முயற்சி - தடுக்க முயன்ற மாமனார், மாமியாருக்கு அரிவாள் வெட்டு

வரதட்சணையாக கொடுத்த நிலத்தை விற்பதை தடுக்க முயன்ற மாமனார், மாமியார், மனைவி, மற்றும் மனைவியின் தங்கையை அரிவாளால் மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.