அமைச்சருக்கு மாதம் ரூ.100 கோடி மாமூல்? - அடுக்கடுக்கான புகார்கள், வழக்குகள்...
பதிவு : அக்டோபர் 02, 2021, 05:31 PM
மும்பையில் வழிப்பறி, கடத்தல், நில அபகரிப்பு புகார்களில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், ரஷ்யாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விவகாரத்தில் நடப்பது என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
மும்பையில் வழிப்பறி, கடத்தல், நில அபகரிப்பு புகார்களில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், ரஷ்யாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விவகாரத்தில் நடப்பது என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்... 

மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அண்டிலா வீட்டின் அருகில் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. 

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கைது செய்யப்பட்டதை அடுத்து, அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

இதையடுத்து மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக்  மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் பரம்பீர் சிங். அதாவது மும்பையில் உள்ள பார், ஓட்டல்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர போலீசாரை அனித் தேஷ்முக் வலியுறுத்தியதாக பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார்.  

மராட்டிய அரசியலில் இவ்விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தவும் அனில்தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. 

இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு கையில் எடுத்தது. மாநில அரசும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சாண்டிவால் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்திருக்கிறது.

இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரியான பரம்பீர் சிங், கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்தார், பொய் வழக்கில் கைது செய்துவிடுவோம் என மிரட்டினார், கடத்தலில் ஈடுபட்டார், நில அபகரிப்பு செய்தார் என குவிந்த புகார்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து  ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக இருக்கும் பரம்பீர் சிங்கை, பணியிடை நீக்கம் செய்யுமாறு மாநில உள்துறைக்கு டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே பரிந்துரை செய்தார்.
 
இந்நிலையில் 100 கோடி மாமூல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு பரம்பீர் சிங் ஆஜராகவில்லை என்றும் அவர் ரஷ்யாவுக்கு தப்பிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், பரம்பீர் சிங்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

841 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

168 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

108 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

53 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

36 views

பிற செய்திகள்

"100 கோடி தடுப்பூசி முக்கிய மைல் கல்" - பிரதமர் நரேந்திர மோடி கருத்து

நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த இரவு பகலாக மத்திய அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

7 views

"முல்லைப் பெரியாறில் எவ்வளவு நீர் தேக்கலாம்?"

கேரளாவில் பருவ மழையின் போது, முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்ச அளவு நீரை தேக்குவது குறித்து ஓரிரு நாளில் மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது - ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்...?

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

10 views

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

7 views

தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினி - திரைத்துறையில் வாழ்நாள் சாதனை

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு உள்ளது

12 views

பாஜக எம்.பி என்பதால் பிரச்சனை வராது - அமலாக்கத் துறை பற்றி பா.ஜ.க எம்.பி கருத்து

பாஜக எம்.பி என்பதால், அமலாக்கத் துறையால், தனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என மகாராஷ்ட்ரா எம்.பி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.