15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பின் திருமணம் - திருமணம் செய்த பிறகும் ஏமாற்றிய சாமியார் கைது
பதிவு : அக்டோபர் 02, 2021, 05:31 PM
15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பின் திருமணம் - திருமணம் செய்த பிறகும் ஏமாற்றிய சாமியார் கைது
15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பின் திருமணம் - திருமணம் செய்த பிறகும் ஏமாற்றிய சாமியார் கைது

சென்னையில்15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவரை திருமணம் செய்து ஏமாற்றிய சாமியாரை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவன் குமரன். இவர் அங்குள்ள அம்மன் கோவிலில் சாமியாராக உள்ளார். தன் அண்ணியின் தங்கையான 15 வயது சிறுமியை இவர் கடந்த 2015ல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அதே சிறுமியை குமரனின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தி வந்த அவர், ஒரு கட்டத்தில் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதோடு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனிடையே சிறுமி 5 ஆண்டுகளுக்கு பிறகு பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதன்பேரில் குமரனை கைது செய்த போலீசார், அவரின் பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

பிற செய்திகள்

காவல் துறை அதிகாரிக்கு அபராதம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பொய் வழக்கில் கைது செய்து கிராமவாசியை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 views

தமிழகத்தில் மேலும் 1,192 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

6 views

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

34 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

9 views

சி.எஸ்.கே. இல்லாமல் தோனி இல்லை; தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை - வத‌ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி விளையாடுவாரா என்கிற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன்.

1581 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.