ஊழல் எனும் கரையான்- நீதிபதிகள் வேதனை
பதிவு : அக்டோபர் 02, 2021, 04:36 PM
ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஊழல் எனும் கரையான்- நீதிபதிகள் வேதனை

ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் மீண்டும் அவருக்கு பணி வழங்க உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.அத்துடன், ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும் லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டதாக கூறிய நீதிபதிகள் ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

பிற செய்திகள்

"பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி

பட்டாசு உற்பத்தியில் பலமுறை விதிமீறல் நடந்துள்ளதாக, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

1 views

பெகாசஸ் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு : கமல்ஹாசன் வரவேற்று டுவிட்டர் பதிவு

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

20 views

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி - அலாரம் அடித்ததால் கொள்ளையன் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

9 views

நகைகளை உருக்குவது தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக கோவில்களுக்கு அறங்காவர்கள் நியமிக்கும் வரை, நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 views

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன்; உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? - தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்

தூத்துக்குடியில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகனின் உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? என போலீசார் தேடி வருகின்றனர்.

13 views

மூதாட்டி சேலையில் மளமளவென பற்றிய தீயை அணைத்த காவலர் - வைரல் வீடியோ

கோவிலில் மூதாட்டி ஒருவரின் உடையில் பற்றிய தீயை போக்குவரத்து காவலர் அணைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.