ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க தீவிரம் - மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல்
பதிவு : அக்டோபர் 02, 2021, 02:06 PM
நீலகிரியில் ஆட்கொல்லி புலியுடன் மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பதால் தவறுதலாக அதனை சுட்டு விட வேண்டாம் என அதிரடி படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் ஆட்கொல்லி புலியுடன் மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பதால் தவறுதலாக அதனை சுட்டு விட வேண்டாம் என அதிரடி படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் 4 பேரை வேட்டையாடி கொன்ற புலியை சுட்டு பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினரும், அதிரடிப்படியினரும் ஈடுபட்டு வருகின்றனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியில் அதனை பிடிப்பதற்கான பணிகள் தயார்ப்படுத்தப்பட்ட நிலையில் ஆட்கொல்லி புலியின் கால்தடம் மட்டுமின்றி மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் தவறுதலாக அந்த புலிகளை சுட்டு விட கூடாது என்பதற்காக குறி வைக்கும் புலியின் புகைப்படம் அதிரடிப்படையினருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அடையாளங்களை கொண்ட புலியை மட்டுமே சுட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

63 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

"பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு

நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

36 views

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தாயின் இரண்டாவது கணவர் கைது

சென்னையில், மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

12 views

ஆந்திராவில் இருந்து 4500 கனஅடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திராவில் இருந்து நான்காயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20 views

கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு - ஊட்டி மலை ரயில் ரத்து

தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

20 views

"ஆவின் நிறுவனத்திடம் இனிப்பை வாங்குங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

41 views

பண்டிகை காலம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

பண்டிகை காலங்களில் பொதுமக்கள், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முக‌க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.