இந்தியாவின் கோவிஷீல்ட், சீனாவின் சினோவேக் - தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம்
பதிவு : அக்டோபர் 01, 2021, 06:06 PM
இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் சீனாவின் சினோவேக் தடுப்பூசிகளுக்கு ஆஸ்த்ரேலியா அங்கீகாரம் அளித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய தீவு நாடானா ஆஸ்த்ரேலியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த பின், வெளிநாட்டினர் ஆஸ்த்ரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டது. 64 சதவீத மக்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்த்ரேலியாவிற்கு செல்லவதற்கான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தபட உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், சீனாவின் சினோவேக் தடுப்பூசிக்கும் ஆஸ்த்ரேலிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் விளைவாக, ஆஸ்த்ரேலியாவில் உயர் கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான இந்தியா மற்றும் சீன மாணவர்கள் மீண்டும் ஆஸ்த்ரேலியாவிற்கு செல்ல வழி பிறந்துள்ளது. ஆஸ்த்ரேலியாவில் உயர் கல்வி பயிலும் சுமார் 57,000 வெளிநாட்டு மாணவர்கள் தற்போது தங்கள் சொந்த நாட்டில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து ஆஸ்த்ரேலியாவின் எல்லைகளை திறக்க போவதாக ஆஸ்த்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். இதன் மூலம் ஆஸ்த்ரேலியாவிற்கும் சீனாவிற்கு ஏற்பட்டுள்ள மோதல்கள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


பிற செய்திகள்

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய அதிபர் மீது வழக்குகள்

கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் அலட்சியமாக செயல்பட்டு வந்த பிரேசில் அதிபர் பொல்சனரோவுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 views

ஹோன்டுராசில் இருந்து வெளியேறிய மக்கள் - மெக்சிகோவில் தஞ்சம்

ஹோன்டுராஸ் நாட்டில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோர், புதிய வாழ்க்கை தொடங்குவதில் முனைப்பாக உள்ளனர்.

9 views

பெனினில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைப்பு

பெனின் நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலாச்சார கலைப்பொருட்களை திருப்பியளிப்பதற்கு முன்னதாக பாரிஸ் அருங்காட்சியகத்தில் இறுதியாக அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

4 views

லா பல்மா எரிமலை வெடிப்பு - விண்ணை முட்ட மேலெழும்பும் புகை

ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து லாவா குழம்பும் புகையும் வெளியேறி வரும் நிலையில், அது தொடர்பான் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன

8 views

12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி - இன்னும் சில வாரங்களில் அனுமதி

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களுக்குள்ளாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 views

2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் - பணியாளர்களுக்கான அதிகாரப்பூர்வ சீருடை

பெய்ஜிங் 2022 ஒலிம்பிக்கில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கான சீருடை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.