புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கப்பட்டதில் குறைகள் இருப்பதாக வழக்கு - நீதிமன்றம் எச்சரிக்கை
பதிவு : செப்டம்பர் 30, 2021, 05:10 PM
உள்ளாட்சி தேர்தலில் வார்டு ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வார்டு ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கப்பட்டதில் குறைகள் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி  அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், சுழற்சி முறையில் வார்டுகள் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். 

அப்பொழுது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் சுழற்சி ஒதுக்கீடு என்பது 2 முறை மட்டுமே செயல்படும் என்பதால் இந்த முறையில் தவறுகள் உள்ளதாக கூறியதுடன்,

சுழற்சி முறையில் வார்டு ஒதுக்கீடு செய்வதில் உள்ள விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

மேலும், சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது விதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அரசாணை அடிப்படையில் இருக்க கூடாது என்ற நீதிபதி, 

வார்டு ஒதுக்கீட்டில் உள்ள குறைகளுக்கு புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

807 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

159 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

43 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

6 views

பிற செய்திகள்

வெள்ளத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் - உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறை தொடக்கம்

மழை வெள்ளத்தில் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய கேரள ஓட்டுநரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறையை மோட்டார் வாகனத் துறையினர் தொடங்கி உள்ளனர்.

3 views

"33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு" - முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பு - 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுந்தர்கல் பகுதியில் சிக்கி தவித்த 25 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

12 views

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

4 views

கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.