"புகாருக்கு இடம் தராமல் உள்ளாட்சி தேர்தல்" - உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 30, 2021, 04:46 PM
எந்த புகாருக்கும் இடம்தராத வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எந்த புகாருக்கும் இடம்தராத வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அதிமுக தொடர்ந்த வழக்கு  தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த‌து.அப்போது அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்த தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால், என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாளை பதில் அளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.


பிற செய்திகள்

காவல் துறை அதிகாரிக்கு அபராதம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பொய் வழக்கில் கைது செய்து கிராமவாசியை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 views

தமிழகத்தில் மேலும் 1,192 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

6 views

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

31 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

9 views

சி.எஸ்.கே. இல்லாமல் தோனி இல்லை; தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை - வத‌ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி விளையாடுவாரா என்கிற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன்.

1560 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.