மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
பதிவு : செப்டம்பர் 24, 2021, 07:37 PM
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுமானம் குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, மேகேதாட்டு விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை  தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்கும் போது உரிய விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என வாதிட்டார். கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், மாநிலங்கள் ஒன்றுக்கொன்று என்ஜிடியில் சண்டையிட தொடங்கினால் பிரச்சினைகள் உருவாகும்  என வாதிட்டார். இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்கபோவதில்லை என கூறினர். தானாக முன் வந்து பதிவும் செய்யும் அதிகாரம் என்ஜிடிக்கு  உள்ளதா என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வெளி வந்த பிறகு தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

தீவிரமாகும் எரிமலை வெடிப்பு - வழிந்தோடும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு சென்ற இடங்களையெல்லாம் சாம்பலாக்கி சென்றுள்ளது.

333 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றிய சசிகலா

அதிமுகவின் பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், சசிகலா அதிமுக கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்..

1 views

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் மரணம் - விலங்குகள் நல ஆர்வலர் புகார்

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

16 views

"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

12 views

பொன்விழா ஆண்டில் அதிமுக - அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில், எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

220 views

பொன்விழா ஆண்டில் அதிமுக: எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சி கடந்து வந்த பாதை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...

62 views

தமிழகத்தில் மேலும் 1,233 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.