மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர் - சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 16, 2021, 03:58 PM
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்தவர் நந்தன். இவருக்கும் கிராம ஊர்மக்களுக்கும் இடையே அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நந்தன் காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், நந்தன் மன உளைச்சலுக்கு ஆளாகியிள்ளார். இந்நிலையில் நந்தன்  கதவாளம் கிராம உதவியாளரை கற்களால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாக்கியலட்சுமி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், நந்தன் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஆட்சியர் அலுவகத்திற்கு சென்ற நந்தன், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்நிலையில், நந்தன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

49 views

பிற செய்திகள்

மெட்ரோ ரயில் நிலைய பணி - போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகளை முன்னிட்டு அயனாவரம்-புரசைவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

5 views

பருவமழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

10 views

பயங்கரவாத குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை - அமைச்சர் ரகுபதி

10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலையில் பயங்கரவாத குற்றவாளிகளை விடுவிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

9 views

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: சேதமடைந்த தரைப்பாலங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரைப்பாலங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

8 views

நிரம்பிய குமரி அணைகள் - 25,738 கன அடி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இருந்து 25 ஆயிரத்து 738 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 views

அதிமுக பொன்விழா ஆண்டு; எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை -ஆடல், பாடலுடன் அதிமுகவினர் உற்சாகம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.