"மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ஆம் தேதி மாற்றம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 04:08 PM
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலியாக மெகா தடுப்பூசி முகாம் தேதி வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த முகாம் வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். அன்றைய தினம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 52 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 48 %  பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.