2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கைது - ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 08:11 AM
2 தீவிரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 தீவிரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேட்டியளித்த டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் நீரஜ் தாக்குர், இணை ஆணையர் பிரமோத் குஷ்வஹா, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற நூல் சந்த் லாலா, அமீர் ஜாவீது ஆகிய இரு தீவிரவாதிகள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். நாடு முழுவதும் அவர்கள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர். 6 பேரில், ராஜஸ்தானில் இருந்து ஒருவர், டெல்லியிலிருந்து இருவர், உத்தர பிரதேசத்திலிருந்து மூவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், இவர்கள் இரு குழுவினராக இருந்ததும், அதில் ஒரு குழுவை தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் ஒருங்கிணைத்ததும் தெரிய வந்துள்ளது. ஒரு குழுவுக்கு ஆயுதங்களை கடத்தி பதுக்கி வைக்கவும், மற்றொரு குழுவுக்கு ஹவாலா வழியாக பயங்கரவாத அமைப்புக்கு பணத்தை திரட்டி உதவவும் உத்தரவிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் அரவணைப்பில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 views

மனநலன் பாதிக்கப்பட்ட தந்தை வெறிச்செயல்: மனைவி, குழந்தையை கத்தியால் குத்திய கணவர்

கேரளா மாநிலம் கண்ணூரில் இளைஞர் ஒருவர் தனது 9 மாத குழந்தை மற்றும் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

10 views

மகாநதி ஆற்றில் சிக்கிய யானை: மீட்க சென்ற போது படகு கவிழ்ந்து பத்திரிகையாளர் உயிரிழந்த பரிதாபம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி ஆற்றில் சிக்கிய யானையை மீட்க சென்ற போது, படகு கவிழ்ந்து, பத்திரிகையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

115 views

கோட்டயம் மாவட்ட திடநாடு பஞ்சாயத்து: இலவச கல்யாண தரகு சேவையை தொடங்கியது

கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திடநாடு பஞ்சாயத்து நிர்வாகம், இலவச கல்யாண தரகு சேவையை தொடங்கியுள்ளது.

54 views

நடப்பு நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி - மத்திய நிதி அமைச்சகம்

நடப்பு நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.