உலக புகழ்பெற்ற 'மெட் காலா' பேஷன் ஷோ - கண்கவர் ஆடையால் கவர்ந்த பிரபலங்கள்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 08:02 AM
நியூயார்க்கில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சி உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து சிறிய காட்சி தொகுப்பு..
மனதை கவர்ந்த பிரபலங்களின் அழகிய அணிவகுப்பு...கண்களை கவர்ந்த பல்வேறு வகை ஆடைகள்...ஆடையில் அரசியல் பேசிய பிரபலங்கள் என 
உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது நியூயார்க்கில் நிகழ்ந்த மெட் காலா FASHION SHOW...நியூயார்க்கில் உள்ள பிரபல கலை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டுவதற்காக 1948 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சி இது.கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று கோலாகலமாக நடத்தப்பட்டது.இதில் அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பாப் பாடகர்கள் என உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு டிக்கெட்டின் விலை 30,000 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய். குறிப்பாக டென்னிஸ் நட்சத்திரங்கள் செரினா வில்லியம்ஸ், ஒசாகா, கார் பந்தய வீரர் லீவிஸ் ஹாமில்டன், அமெரிக்க மகளிர் கால்பந்து நட்சத்திரம் மேகன் ரபினோ(Megan Rapinoe), பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ்(SIMONE BILES) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதில் ஒசாகாவின் சிகை அலங்காரமும், செரினா மற்றும் சிமோன் பைல்ஸ்(SIMONE BILES) ஆகியோரது ஆடை அலங்காரம் கவனத்தை ஈர்த்தன...அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நியா டென்னிஸ்(NIA DENNIS), ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்டது ரசிக்கும்படி இருந்தது..இதுஒருபுறம் என்றால் ஹாலிவுட் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ், உலக புகழ் பாடகி ரிஹானா ஆகியோரது வருகை நிகழ்ச்சியை அழகாக்கியது.இந்த நிகழ்ச்சியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தவர்கள் மூன்று பேர்.. உடல் முழுவதையும் மூடியவாறு கருப்பு ஆடை அணிந்து வந்த அமெரிக்க மீடியா புகழ் கிம் கர்டாஷியான் தான் இன்றைய டிரெண்டிங்...(Kim Kardashian),இதைதவிர ரோபோ குழந்தையுடன் வந்திறங்கிய அமெரிக்க பாடகர் பிராங்க் ஓசன்(FRANK OCEAN)பணக்காரர்களுக்கு வரி விதியுங்கள் என்ற வாசகத்துடன் அரசியல் பிரபலம் அலெக்சாண்டியா(Alexandria Ocasio-Cortez) உள்ளிட்டோர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.இணையத்தில் பேசுபொளாகினர்..
தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

குறைந்து வரும் உலகளாவிய இணைய சுதந்திரம் - டாப் 10 பட்டியல்

உலக அளவில் அளவில்லா இணைய சுதந்திரம் உள்ள டாப்-10 நாடுகளின் பட்டியலையும், இணைய சுதந்திரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் டாப் - 10 நாடுகளின் பட்டியலையும் தற்போது பார்க்கலாம்.

9 views

ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு : இரு தரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை

மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.

62 views

அமெரிக்காவில் பூஸ்டர் டோசுக்கு அனுமதி - உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

8 views

லா பால்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியதால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.

8 views

ஆப்கானில் குறைந்த ஏற்றுமதி - சுங்க முகவர்கள் கருத்து

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியில் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுங்க முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

9 views

விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய ஐசக்மேன் - குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்டில் 3 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் ஐசக்மேன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினருடன் தனிமைப் படுத்தப்பட்டார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.