பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து
பதிவு : செப்டம்பர் 14, 2021, 04:49 PM
புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து

புதிய வாகனங்களுக்கு  5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு  செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.சாலை விபத்து வழக்கில் இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிடப்படிருந்தது.இதற்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால்,இந்திய காப்பீடு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் காப்பீடு  நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 5 ஆண்டுகளுக்கான பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை என்பதால் அதனை திரும்பப் பெறுவதாக நீதிபதி அறிவித்தார்.காப்பீடு தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துதுறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்-லைன் முன்பதிவு - பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

11 views

யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - ராஜ்யசபா எம்.பி.யாக செல்வகணபதி தேர்வு?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.

15 views

திருப்பதி கோயில் அறங்காவலர் குழு - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக 52 பேரை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

எரிச்சலூட்டும் ஹாரனுக்கு பதில் இன்னிசை.! - புதிய விதிகளை உருவாக்க திட்டம்

ஹாரன் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்கு பதிலாக தபேலா, ஹார்மோனியம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கச் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான இத்திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

9 views

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் - ஐநாவில் பேச்சு

நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பின்னர், ஐநா கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

29 views

புதுச்சேரியில் 3 கட்ட உள்ளாட்சி தேர்தல்

புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.