முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 05:00 PM
முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்
முதல்வராக பதவியேற்றார் புபேந்திர பாய் படேல் -அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும்

குஜராத்தின் 17 வது முதல்வராக புபேந்திரபாய் ரஜினிகாந்த் பட்டேல் பதவியேற்றுள்ளார்.அகமதாபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் புபேந்திர பாய் பட்டியலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர்,பிரல்ஹாத் சிங் ஜோஷி, துணை முதல்வராக இருந்த நிதின் படேல், மாநில பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். பாட்டீல், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள்  பலர் கலந்து கொண்டனர். முதல்வராக பதவியேற்ற புபேந்திர பட்டேலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.புபேந்திர பட்டேலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் புதிய அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி மற்றும் துணை முதல்வர் நித்தின் பட்டேல் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து புபேந்திர பட்டேல் வாழ்த்து பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

மோடி - பைடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை: செப்.24-ம் தேதி இரு தலைவர்களும் சந்திப்பு

வருகிற 24-ம் தேதி பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் பைடனும் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

2 views

"அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்"- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

புதுச்சேரியில் அடுத்த பத்து நாட்கள் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 views

கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 45.24 லட்சம்

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 24 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

42 views

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் - வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.

6 views

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் குஜராத் - எப்படி சாத்தியமானது?

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் மாநிலமாக மாறியுள்ளது, குஜராத் மாநிலம்...

10 views

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.