அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 04:21 PM
அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு
அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு

இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில், குறுகிய கால "மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவையில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.அதில் அரசின் முதன்மை திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் உயர்நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதன்மை திட்டங்களின் முன்னேற்றம், சவால்கள் பிரச்சனைகள் குறித்து இந்த குழு விரிவான ஆலோசனை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அறிக்கை அடிப்படையில், முதன்மை திட்டங்களில் கொள்கை அளவிலான மாற்றங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் முகப்பு பலகை தகவல் தொழில்நுட்பவியல் துறையால் உருவாக்கப்படும் எனவும் இந்த முகப்பு பலகையின் மூலம் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் என்றும் முக்கிய செயல் திறன் குறியீடுகளின் அடிப்படையில், தொடர்புடைய துறைகளின் செயல்பாடுகள் முதலமைச்சர் முகப்பு பலகை வாயிலாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில்,குறுகிய கால "மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்"  என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் அடிப்படையில், உயர்நிலையில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

14 views

"பாகிஸ்தானை மட்டும் எதிர்த்தால் போதாது" - காங். செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்து

பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஐ.நா. பொதுசபையில் முழு வீச்சில் எதிர்வினையாற்றும் இந்தியா, மற்ற சர்வதேச விவகாரங்களையும் பேசி இருக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறி உள்ளார்.

11 views

"மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை" - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

ஐ.நா. பொதுசபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

300 views

"நகை கடன் பெற்றதில் பெரிய அளவிற்கு முறைகேடு" - அமைச்சர் தங்கம் தென்னரசு

நகை கடன் பெற்றதில் பெரிய அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

10 views

தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

சென்னையில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

33 views

காட்பாடி ஒன்றிய அலுவலக மோதல்: அதிமுகவினர் மீது வழக்கு-3 பேர் கைது

காட்பாடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக அதிமுகவினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டதை அடுத்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.