தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன் - சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?
பதிவு : செப்டம்பர் 13, 2021, 04:16 PM
சேலம் அருகே தாத்தா, பாட்டியை 16 வயதான பேரன் கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இத்தனை கொடூர மனநிலைக்கு சிறுவனை செல்ல வைத்தது எது? இப்போது பார்க்கலாம்....
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா. 70 வயதான இவர், தன் மனைவி காசியம்மாளுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள். முதல் மகன் தேசிங்கு ராஜா. இவர் திமுகவில் உள்ளார். கடந்த முறை கொத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். 2வது மகன் மணி, மூன்றாவது மகன் குமார். பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில் காட்டுராஜாவும், அவரது மனைவியும் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே அதிகாலை இவர்களின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பல மணி நேரமாக போராடியும் உள்ளே இருப்பவர்களை காப்பாற்ற முடியவில்லை. காரணம் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் வீடு முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தீயில் கருகிய நிலையில் கிடந்தனர்.

காட்டுராஜா சடலமாக மீட்கப்படவே, மருத்துவமனை செல்லும் வ​ழியில் காசியம்மாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் காட்டுராஜாவின் 3வது மகனான குமாரின் 16 வயது மகன் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்த போது தான் நடந்தது விபத்து அல்ல. கொடூரமான கொலை என தெரியவந்தது. தாத்தா, பாட்டி மட்டுமின்றி தன் பெரியப்பாவையும் கொல்ல அந்த சிறுவன் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. சிறுவனின் பெரியப்பா, தேசிங்குராஜா ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் ஊரில் செல்வாக்கான நபராக உள்ளார். அத்துடன் வசதியிலும் அவர் உயர்ந்திருக்கிறார். அவ்வப்போது தாத்தா, பாட்டியும் மூத்த மகன் தேசிங்கை பாராட்டி பேசுவது குமாரின் மகனான சிறுவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தான் தன் பெரியப்பாவை கொல்ல திட்டமிட்டுள்ளார் அந்த சிறுவன். தன் பெரியப்பாவை வரவழைக்க அவர் திட்டமிட்ட போது தான் தன் தாத்தா, பாட்டியை கொல்லும் திட்டமானது தோன்றியிருக்கிறது. சம்பவத்தன்று அதிகாலை பெட்ரோல் கேனுடன் வந்த அந்த சிறுவன், தாத்தா, பாட்டியின் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு கூரையின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். எப்படியும் தகவலறிந்து பெரியப்பா வருவார்.. அப்போது அவரை தீர்த்துக் கட்டலாம் என நினைத்து அரிவாளுடன் காத்திருந்த போது போலீசாரிடம் வசமாக சிக்கினார். நடந்ததை எல்லாம் அந்த சிறுவன் போலீசில் வாக்குமூலமாக அளித்த போது போலீசாரே அதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவனை கைது செய்ததோடு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதியவர்கள் தங்கள் பேரனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களை மீளா அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது...

தந்தி டிவி செய்திகளுக்காக ஆத்தூரில் இருந்து செய்தியாளர் சங்கர்...

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

672 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

88 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

14 views

வணிகம் மற்றும் வர்த்தக வார நிறைவு விழா - மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு

நாட்டின் மொத்த வேளாண் ஏற்றுமதியில், கடல்சார் ஏற்றுமதி 18 சதவீதம் என்றும், கடல் சார்ந்த ஏற்றுமதிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

20 views

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சிறுமி - தைரியமாக இருக்குமாறு முதல்வர் ஆறுதல்

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சேலத்தை சேர்ந்த சிறுமியிடம் தொலைபேசி முதலமைச்சர் ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

79 views

"தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்"; "இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது" - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை

தலைவர்களோடு, விஜய்யின் படங்களை இணைத்தும், தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தும், இனிமேல் போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

12 views

நாகை தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

நாகை அருகே உள்ள குலோத்துங்க சோழர் கால கோயிலில் பூமிக்குள் புதைந்திருந்த 17 ஐம்பொன் சாமி சிலைகள் உள்பட 47 ஐம்பொன் பூஜை பொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

23 views

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு - பொது நகை கடன்களை ஆய்வு செய்ய உத்தரவு

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு விவகாரத்தில் 5 சவரன் மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீதம் பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழுவை அமைத்ததுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.