நீட் விவகாரம் - "மாணவர்களை திமுக குழப்பியது" - எடப்பாடி பழனிசாமி
பதிவு : செப்டம்பர் 13, 2021, 01:53 PM
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் தனுஷ் குறித்து பேச அனுமதி தரப்படாததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் தனுஷ் குறித்து பேச அனுமதி தரப்படாததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, அதிமுக வெளிநடப்பு செய்தது. அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் குறித்து பேச அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை திமுக குழப்பியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.