"கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியது" - கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் சர்ச்சை பேச்சு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 12:56 PM
கர்நாடகாவில் கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியதாக, முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியின் போது, 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்த 16 பேரில் ஒருவரான ஸ்ரீமந்த் பாட்டீல், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். எடியூரப்பா ராஜினாமா செய்த பின்னர், பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் ஸ்ரீமந்த்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர், நேற்று செய்தியாளர்களிடம் சந்தித்த போது, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைய எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என பாஜக கூறியதாகவும், தான் பணம் வாங்காமால் அமைச்சர் பதவியை மட்டும் கேட்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.  ஸ்ரீமந்த்தின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு - கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து

கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கும் வரும் நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது.

1 views

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை

அதிமுக பொன்விழாவை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்துகின்றனர்

5 views

முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்த, பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சைபர் கிரைம் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

9 views

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றிய சசிகலா

அதிமுகவின் பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், சசிகலா அதிமுக கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்..

13 views

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

19 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

111 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.