தாத்தா, பாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பேரன்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 12:54 PM
சேலம் அருகே தாத்தா, பாட்டியை வீட்டுக்குள் பூட்டி வைத்து தீ வைத்து எரித்துக் கொடூரமாக கொன்றதாக 16 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொத்தம்பாடியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரின் மனைவி காசியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள். இதில் முதல் மகன் தேசிங்கு ராஜா திமுகவில் உள்ளார். கடந்த முறை கொத்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே காட்டுராஜாவின் 3வது மகனான குமாரின் 16 வயதான சிறுவன், தன் பெரியப்பாவின் வளர்ச்சி பிடிக்காமல் இருந்துள்ளார். இதனால் தன் பெரியப்பாவை தீர்த்து கட்ட திட்டமிட்டார். இன்று அதிகாலை தன் தாத்தா, பாட்டியின் வீட்டுக்கு சென்ற சிறுவன், அவர்கள் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு கூரை வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். எப்படியும் இந்த தகவலறிந்து பெரியப்பா தேசிங்கு வருவார். அப்போது அவரை கொன்று விடலாம் என நினைத்து அரிவாளுடன் காத்திருந்த சிறுவனை போலீசார் பிடித்தனர். இதனிடையே தீயில் கருகிய முதியவர்களின் சடலங்களை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.