சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 12:33 PM
சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்குகள் குறித்த 3வது பட்டியலை இந்த மாதம் இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு வழங்க உள்ளது. அதுவும் இம்முறை முதல் முறையாக சொத்து விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.
உலகிலேயே பாதுகாப்பாகப் பணத்தைச் சேமித்து வைக்கக்கூடிய வங்கிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, சுவிஸ் வங்கி

இந்த வங்கியில் கணக்கு தொடங்கி பணம் டெபாசிட் செய்யும் வெளிநாட்டினர், பணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை

இதனால் கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பல வெளிநாட்டினரும் இந்த வங்கியை நாடுகின்றன. 

இந்நிலையில், மோடி தலைமையிலான அரசு கருப்பு பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன் படி, ஸ்விட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை தானாக பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது, அந்நாடு அரசு. 

இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை முதல் முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும்

2வது தடைவையாக கடந்தாண்டு செப்டம்பர் மாதமும் வழங்கியது, ஸ்விட்சர்லாந்து அரசு. 

இந்நிலையில், இம்முறை மூன்றாவது பட்டியலை அளிக்க உள்ள ஸ்விட்சர்லாந்து அரசு... முதல் முறையாக இந்தியர்களின் சொத்து விவரங்களையும் பகிர உள்ளது. 

ரியல் ஸ்டேட் விவரங்கள், ஸ்விட்சர்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் குறித்த விவரங்களும் வழங்கப்பட உள்ளன. 

இதோடு, இந்த சொத்துக்கள் மூலம் இந்தியர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறித்த விவரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற உள்ளன. 

அதே வேளையில், இந்தியர்களால் லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை மற்றும் டிஜிட்டல் நாணயங்களில் செய்யப்படும் முதலீடு விவரங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சொத்து விவரங்களை வெளியிடுவதன் மூலம் அவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பானவை அல்ல என்பதை உறுதிப்படுத்த நினைப்பதோடு, 

ரியல் ஸ்டேட்டில் முதலீடு செய்யவும் ஸ்விட்சர்லாந்து  உகந்தது என்பதை எடுத்து கூற அந்நாடு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

461 views

கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

கொலம்பியாவில் கருப்பு சந்தையில் இருந்து மீட்கப்பட்ட 31 ஆமைகள் அதிகாரிகளால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

14 views

மின்கலன் கருவிகள் கொள்முதல் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

13 views

கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

9 views

பிற செய்திகள்

"தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு" - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

0 views

ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - இங்கிலாந்து நாளை பயிற்சி ஆட்டம்

ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.

0 views

அதிமுக பொன்விழா ஆண்டு; எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை -ஆடல், பாடலுடன் அதிமுகவினர் உற்சாகம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

6 views

பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் - வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

விருதுநகரில் 15 ஆண்டுகளாக இருந்த பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதம் செய்த 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

7 views

அதிமுக பொன்விழா நாள் - ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அலங்காரம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளன.

7 views

பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு - கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து

கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கும் வரும் நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.