மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கம்பேக் : அடுத்தடுத்து கோல் - அசத்திய ரொனால்டோ
பதிவு : செப்டம்பர் 13, 2021, 02:19 AM
நீண்ட இடைவெளிக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி அடுத்தடுத்த கோல்களை அடித்து ரொனால்டோ அசத்தியுள்ளார்.
12 வருடங்கள்... 118 நாட்கள்... இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக மீண்டும் களமிறங்கினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ...ஆதர்ச நாயகன் மீண்டும் களம் காண்பதை கண்டு, விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷம் எழுப்பி ரொனால்டோவை உற்சாகமாக வரவேற்றனர் ரசிகர்கள்...NEW CASTLE அணிக்கு எதிரான போட்டி அது... ரொனால்டோவின் ஒவ்வொரு மூவையும் ஆசை ஆசையாக ரசித்தனர் ரசிகர்கள்...தொடக்கத்தில் சிறு தடுமாற்றங்கள் ஏமாற்றமடைய வைத்தாலும், முதல் பாதி இறுதியில் மிக எளிய வாய்ப்பை ரொனால்டோ கோலாக மாற்ற, மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள்...62வது நிமிடத்தில் சென்டர் கோர்ட்டில் சக வீரர் கொடுத்த பாஸை லாவகமாக பயன்படுத்தி கோல் போஸ்ட் வரை கடத்தி சென்ற ரொனால்டோ, கோல் கீப்பரை குறிவைத்து பந்தை உதைத்து சம்பவம் செய்தார். கோல் அடித்ததற்கு பின்னர் தனது டிரெட்மார்க் ஸ்டைலில் ரொனால்டோ மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்தானது அந்த நிமிடங்கள்... 
போட்டியை நேரில் காண வந்திருந்த ரொனால்டோவின் தாயார், மகனின் அடுத்தடுத்த கோல்களை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுத்த புகைப்படங்கள் இணையத்தை அலங்கரித்துள்ளன.இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான அவரது பயணம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கானது.. அதற்கு பின்னர் ரியல் மாட்ரீட்டில் கோலோச்சி, பின்னர் ஜுவன்டஸ் அணிக்காக விளையாடியவர், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிவிட்டார்... கம்பேக் போட்டியில் அடுத்தடுத்த கோல்களால் ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டார். இனிவரும் போட்டிகளிலும் ரொனால்டோவின் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சனிக்கிழமை இரவை கடத்தியுள்ளனர் ரசிகர்கள்...


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

608 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

388 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

56 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

55 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

41 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

12 views

பிற செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிப்போட்டியில் இளம் புயல்கள் களம் - 18 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிப்போட்டியில் இளம் புயல்கள் களம் - 18 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம்

17 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இங்கிலாந்து நாட்டின் இளம் வீராங்கனை எம்மா ராட்கானு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

10 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

7 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

9 views

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா : இந்தியா Vs இங்கிலாந்து - 5வது டெஸ்ட் ரத்து

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதை அடுத்து, இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

11 views

இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு

இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.