குஜராத் மாநில முதல்வர் புபேந்திர பாய் பட்டேல் - பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு
பதிவு : செப்டம்பர் 12, 2021, 07:06 PM
குஜராத் மாநில முதல்வர் புபேந்திர பாய் பட்டேல் - பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு
குஜராத் மாநில முதல்வர் புபேந்திர பாய் பட்டேல் - பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு 

குஜராத் மாநில முதல்வராக புபேந்திர பாய் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சராக இருந்த விஜய் ரூபானி, நேற்று திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக அவர் கூறினார்.பாஜக ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அவர் பதவி விலகியதால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள், துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், லட்சத்தீவு யூனியன் பிரதேச அதிகாரி பிரபுல் கோடா படேல் ஆகியோரது பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில் இன்று, குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காந்திநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புபேந்திர பாய் பட்டேல், முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.  விரைவில், புபேந்திர பாய் பட்டேல் பதவி ஏற்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது.

59 வயதாகும் புபேந்திர பாய் படேல் குஜராத்தில் உள்ள கட்லோடியா சட்டமன்ற தொகுதியில் இருந்து கடந்த 2017 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். கடந்த 2017 - ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கட்லோடியா சட்டமன்ற தொகுதியில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் புபேந்திர பட்டேல் வெற்றி பெற்றார்.இந்நிலையில் குஜராத்தில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பாரதிய ஜனதா முதல்வராக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
குஜராத் மாநில முதல்வராக புபேந்திர பாய் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், புபேந்திர பாய் பட்டேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது நன்று என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

388 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

54 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

"காதலுக்கு தற்கொலை செய்தால் அதற்கு தடை உண்டா?" - ஹெச்.ராஜா

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது பிரிவினை வாத செயல் என, பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

11 views

நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி

நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி

38 views

"நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்" - மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

10 views

10,11ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணை தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

20 views

“13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்“ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

23 views

"ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவரை ஆளுநராக பாஜக நியமிக்கிறது" - சீமான்

தமிழகத்திற்கு வரக்கூடிய ஆளுநர் உளவுத்துறையில் இருந்து வருவதால், ஆய்வு ஏதும் செய்யாமல் அவரது பணியை பார்க்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.