தீபாவளிக்கு அண்ணாத்த vs மாநாடு -வலிமை ரிலீசாகுமா என எதிர்பார்ப்பு
பதிவு : செப்டம்பர் 11, 2021, 11:48 PM
தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் சிம்பு நடித்துள்ள மாநாடு படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ரேஸில் உள்ள படங்களை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
பொங்கல், தீபாவளி என்றாலே பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பது தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு வரும் வழக்கம்..ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களோ அல்லது முன்னணி இயக்குனர்களின் படைப்புகளோ வரிசைக்கட்டி போட்டிபோடும் கடந்த ஆண்டு தீபாவளி ரிலீஸுக்கு கொரோனா தடை போட்டாலும், பொங்கல் விருந்தாக ரசிகர்களை குஷிப்படுத்தின மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்கள்..பொங்கல் பண்டிகையின் போது விஜயுடன் போட்டி போட்ட சிலம்பரசன், தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக மாநாடுடன் தயாராகிவிட்டார்..தீபாவளிக்கு நாங்கள் ரெடி என ஏற்கனவே அறிவித்த அண்ணாத்த படக்குழு, விநாயகர் சதுர்த்தி தினத்தில், ரஜினியின் மாஸை வெளிக்காட்டும் விதமாக மோசன் போஸ்டரை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டது.தற்போது மாநாடு படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சிலம்பரசன்..
பெரிய ஹிட்டிற்காக காத்திருக்கும் சிலம்பரசன்... வெங்கட்பிரபு இயக்கம். எஸ்.ஜே சூர்யா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம்... யுவன்சங்கர் ராஜா மியூசிக்... இவை அனைத்துமே மாநாட்டை மிகவும் எதிர்பார்க்க வைக்கும் அம்சங்கள்..இவை எல்லாம் ஒருபுறம் என்றால் நீண்ட நாட்களாக ரசிகர்களை அப்டேட்க்காக காக்க வைத்த வலிமை படக்குழு, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் முனைப்பு காட்டுவதாக பேசப்படுகிறது.ஒருவேளை அவர்களும் களத்தில் குதித்தால் ரஜினி, அஜித்துடன் மோத வேண்டிய நிலை சிம்புவிற்கு உருவாகலாம்..மூன்று தயாரிப்பாளர்களும் எதிர்பார்க்கும் அளவிற்கு திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வியும் உள்ளது.எது எப்படி இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தால், திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம் என்பதே அண்ணாத்த, மாநாடு படக்குழுவினரின் எதிர்பார்ப்பு...


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

663 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

81 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

41 views

பிற செய்திகள்

வலிமை - முதல் பார்வை வெளியீடு

வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தி​ன் படக் காட்சிகள் வெளியாகி உள்ளது.

32 views

நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் - விஜயலட்சுமியை ஸ்மிதாவாக மாற்றிய சினிமா

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு தினம் இன்று...

9 views

ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள 'விசித்திரன்' - நவம்பரில் படம் வெளியீடு

பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

114 views

அரண்மனை-3 படத்தின் 3ஆவது பாடல்: 'லொஜக் மொஜக்' பாடல் வெளியீடு

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை-3 படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில், விவேக், ராஷி கண்ணா, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

140 views

விக்ரம், துருவ் விக்ரமின் "மகான்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் விக்ரமின் "மகான்" திரைப்படத்தில் இருந்து "சூறையாட்டம்" என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

1061 views

அஜித்தின் வலிமை படம் பொங்கல் வெளியீடு - தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு

அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.