கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : "தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது" - குற்றம் சாட்டப்பட்ட மனோஜ்சாமி தகவல்
பதிவு : செப்டம்பர் 10, 2021, 06:08 PM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராக முடியாது, என குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ்சாமி கூறியுள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக தனிப்படை அதிகாரி ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே வழக்கில் 9வது நபராக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநிலம் திருச்சூர் கோட்டக்கரா பகுதியை சேர்ந்த மனோஜ்சாமியை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும் அவரை கோவையில் ஆஜராக தனிப்படை போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், தான் வசித்து வரும் கேரள மாநிலம் திருச்சூர் கோட்டக்கரா பகுதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது என்பதால் விசாரணைக்கு வர முடியாது என மனோஜ்சாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

377 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

39 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

30 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

0 views

பிற செய்திகள்

"கருணாநிதியிடம் எம்ஜிஆர் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும்" - ஜெயக்குமார்

தலைவி படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்ஜிஆர் பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்ல என்றும், அவர் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

10 views

ஆளுநர் நியமனம் - கே.எஸ்.அழகிரி சந்தேகம்

ஆளுநர் நியமனம் - கே.எஸ்.அழகிரி சந்தேகம்

5 views

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகள் - கோயில்களில் வைக்க அனுமதி அளிப்பு

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

15 views

3 மாதத்தில் காவல் ஆணையம் அமைக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள காவல்துறையினரின் குறைகளை கேட்கவும், அதற்கு தீர்வு காணவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 மாதங்களில் காவல் ஆணையத்தை அமைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகள் வெளியீடு

செப்டம்பர் 11ம் தேதி ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11 views

வீட்டிலேயே விநாயகர் சிலை கண்காட்சி - தங்கம், வைரம், நவரத்தின கற்களுடன் பல வகையான சிலைகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, பக்தர் ஒருவர் தனது வீட்டில் விதவிதமான பிள்ளையார் சிலைகளுடன் அருங்காட்சியகம் அமைத்துள்ளார்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.