நிபா வைரஸ் தொடர்பு பட்டியல் - 73 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை
பதிவு : செப்டம்பர் 10, 2021, 02:53 PM
நிபா வைரஸ் தொடர்பு பட்டியல் - 73 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை
நிபா வைரஸ் தொடர்பு பட்டியல் - 73 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை 

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களில், மேலும் 5 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது வரை மொத்தம் 274 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் இதுவரை 68 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், யாருக்கும் நிபா பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்தன. இந்நிலையில், தற்போது மேலும் 5 பேரின் முடிவுகளும் நெகட்டிவ் என வந்துள்ளது. இதன் மூலம் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களில் 73 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.