விநாயகர் சிலை வைக்க பந்தல் அமைப்பு - பந்தலை அகற்றிய போலீசார்
பதிவு : செப்டம்பர் 10, 2021, 09:23 AM
கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலை வைப்பதற்காக அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலை வைப்பதற்காக அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. கவர தெருவை சேர்ந்த இளைஞர்கள் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலை வைப்பதற்காக, நண்பர்களுடன் சேர்ந்து பந்தல் அமைத்துக் கொண்டிருந்தார். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக பந்தலை அகற்றுமாறு இளைஞரை அறிவுறுத்தினர். ஆனால், பந்தலை அகற்ற முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, பந்தல் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. கரூர் அருகே இந்து முன்னணியினர், தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். விநாயகர் சிலை பொது இடத்தில் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுக்காலியூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வைக்கப்பட்டது. அப்போது  அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக திண்டுக்கல் கடைவீதியில் மக்கள் குவிந்தனர். திண்டுக்கல் நான்கு ரத வீதியில் களி மண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலை, 20 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டன. மேலும், எருக்கம் பூ, எலுமிச்சை,தேங்காய், வாழைப்பழம், வாழை மரங்கள், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனையும் களைக்கட்டியது. மக்கள் கூட்டத்தால் கடைவீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தடையை ​​மீறி வைக்கப்பட்ட 5 விநாயகர் சிலைகளை வருவாய்த்துறையினர் அகற்றினர். காமக்காபட்டி, சில்வார்பட்டி, வடபுதுப்பட்டி, மற்றும் பெரியகுளம் நகர் பகுதிகளில் தடையை மீறி 11 அடி உயரம் வரை உள்ள 5 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதனை அறிந்த காவல்துறையினர் வருவாய்த்துறையினரின் உதவியுடன் 5 சிலைகளை கைப்பற்றி பெரியகுளம் இந்து சமய அறநிலையத்திற்கு சொந்தமான பாலசுப்பிரமணி திருக்கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

594 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

373 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

38 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

26 views

பிற செய்திகள்

கோவில் வழித்தடத்தால் ஏற்பட்ட தகராறு - இரு சமூகத்தினர் மோதியதால் பரபரப்பு

நாமக்கல் அருகே கோவில் வழித்தட பிரச்சினையில் இரு சமூகத்தினரிடையே மோதல் உருவானதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

23 views

அரசு பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா - பள்ளி மூடல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது.

31 views

விவசாய காப்பீட்டில், நிறுவனங்கள் மவுனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பயிர் காப்பீட்டு தொகையை வட்டியுடன் வழங்கக்கோரும் மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

13 views

"மோசடி கும்பலிடம் சிக்க வேண்டாம்" - சென்னை காவல்துறை வேண்டுகோள்

அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

34 views

கோயிலுக்கு சொந்தமான நிலம்; அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் - பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொண்ட மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

43 views

தமிழக ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.