பிரதமர் மோடி தலைமையில் பிரிக்ஸ் மாநாடு - தலைவர்கள் கருத்து
பதிவு : செப்டம்பர் 10, 2021, 01:45 AM
அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக ஆப்கானிஸ்தான் உருவாகிக்கூடாது என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பேசியுள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபர் தஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர்  விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.ஒத்துழைப்பை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமை தாங்கினார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கடந்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகள் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி இருப்பதாகவும், மீண்டு வரும் உலக பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் மிகச்சிறப்பான குரலை எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சிறந்த தலமாக செயல்படுகிறது என்றார். பின்னர் பேசிய சீன அதிபர் ஜீ ஜின்பிங், சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஆதிக்க சக்தியாக பிரிக்ஸ் நாடுகள் உருவெடுத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.அடுத்ததாக பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா, பிரிக்ஸ் நாடுகள் நாட்டு மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆப்கானிஸ்தான் விவகாரம் நெருக்கடிகளை உண்டாக்கி இருப்பதாகவும்,  தீவிரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு ஆதாரமாகவும், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் அந்நாடு உருவாகிட கூடாது என கேட்டுக் கொண்டார்.  


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

672 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

88 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை - ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைப்பு

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக அஜித் பவார் தலைமையில் ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

13 views

ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் குழப்பம்? : டெல்லியில் முகாமிடும் சச்சின் பைலட்

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பமான சூழல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

15 views

4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்

குவாட் நாடுகளின் கூட்டமைப்பு 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

10 views

போக்குவரத்து காவலரை தாக்கிய ஓட்டுநர் - இணையத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகள்

புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை மதுபோதையில் தாக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் பகுதியில் வாகனம் ஒன்று கட்டுப்பாடின்றி செல்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அதனை தடுத்த நிறுத்தி விசாரித்தனர்.

41 views

"இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - பிரதமர் மோடி

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் என ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலக தடுப்பூசி நிறுவனங்களை இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

15 views

ஐ.நா. சபையின் 76 ஆவது அமர்வில் பிரதமர் மோடி உரை (தமிழில்)

நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மோடி ஐநா சபையின் 76 ஆவது அமர்வில் உரையாற்றினார்.

134 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.