வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம்; அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 04:39 PM
வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொண்ட மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொண்ட மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வடபழனி நெற்குன்றம் பாதையில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி இன்றி,

கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் வி.பெரியசாமி 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு கட்டடங்களை கட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டடங்களில், அம்மா உணவகம், நியாய விலை கடை,  சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்களும் இயங்கி வந்துள்ளன.

குத்தகைக் காலம் 2015ம் ஆண்டு முடிந்த நிலையிலும், அம்மா உணவகமும், நியாய விலை கடையும் தொடர்ந்து இயங்கியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் குற்றம் சாட்டிய நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் பெரியசாமி விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

672 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

88 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

43 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

14 views

வணிகம் மற்றும் வர்த்தக வார நிறைவு விழா - மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு

நாட்டின் மொத்த வேளாண் ஏற்றுமதியில், கடல்சார் ஏற்றுமதி 18 சதவீதம் என்றும், கடல் சார்ந்த ஏற்றுமதிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

20 views

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சிறுமி - தைரியமாக இருக்குமாறு முதல்வர் ஆறுதல்

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சேலத்தை சேர்ந்த சிறுமியிடம் தொலைபேசி முதலமைச்சர் ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

79 views

"தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்"; "இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது" - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை

தலைவர்களோடு, விஜய்யின் படங்களை இணைத்தும், தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தும், இனிமேல் போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

12 views

நாகை தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

நாகை அருகே உள்ள குலோத்துங்க சோழர் கால கோயிலில் பூமிக்குள் புதைந்திருந்த 17 ஐம்பொன் சாமி சிலைகள் உள்பட 47 ஐம்பொன் பூஜை பொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

23 views

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு - பொது நகை கடன்களை ஆய்வு செய்ய உத்தரவு

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு விவகாரத்தில் 5 சவரன் மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீதம் பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழுவை அமைத்ததுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.