தண்ணீர் லாரியின் மீது மோதிய வேன் - 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 04:12 PM
தூத்துக்குடி அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், தண்ணீர் லாரியின் மீது மோதிய விபத்தில் 4 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
தூத்துக்குடி அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், தண்ணீர் லாரியின் மீது மோதிய விபத்தில் 4 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.

தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு செல்ல, பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன், 
புதியமுத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த செல்வராணி, காமாட்சி, சந்தியா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கிராம மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி மணிமேகலை என்ற பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.