பெண் போலீஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?
பதிவு : செப்டம்பர் 09, 2021, 12:10 PM
டெல்லியில் பெண் போலீஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...
டெல்லியில் பெண் போலீஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

டெல்லியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே கடந்த மாதம் 27ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதனிடையே நிர்பயாவை போல கொடூரமான முறையில் சடலமாக பரிதாபாத் அருகே சூரஜ்கண்ட் பகுதியில் இருந்து மீட்கப்பட்டார் பெண் போலீஸ்... உடலில் 50க்கும் மேற்பட்ட கத்திக்குத்துடன் உறுப்புகள் சிதைக்கப்பட்டு, அவர் கிடந்த கோலம் பார்ப்போரை பதற வைத்தது. 

கூட்டு பாலியல் பலாத்காரம் தான் என அந்த பெண் தரப்பு கூறி வந்த நிலையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது நிஜாமுதீன் என்பவர் தானாக வந்து சரணடைந்தார். பெண் போலீசின் காதலன் என கூறப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது... 

இவர்களின் காதலுக்கு இரு தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவே, வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஆனால் பெண் போலீசின் நடத்தையில் மாற்றங்கள் இருந்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்ததால் தன் மனைவியை கடத்திச் சென்று கொடூரமாக கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார் நிஜாமுதீன். 

ஆனால் இந்த சம்பவத்தில் நிஜாமுதீன் தனி ஒருவராக ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பெண் தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் உடலில் ஏற்பட்ட கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம் பெண் போலீசின் இந்த கொடூர மரணத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

நான் மட்டுமே குற்றவாளி என அவரது கணவர் சரணடைந்த நிலையில், பெண் போலீசின் மரணம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது... நிர்பயாவின் மரணத்தை போன்று இவரின் மரணமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் உரிய விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்... 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

659 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

38 views

பிற செய்திகள்

யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - ராஜ்யசபா எம்.பி.யாக செல்வகணபதி தேர்வு?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.

11 views

திருப்பதி கோயில் அறங்காவலர் குழு - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக 52 பேரை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

எரிச்சலூட்டும் ஹாரனுக்கு பதில் இன்னிசை.! - புதிய விதிகளை உருவாக்க திட்டம்

ஹாரன் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்கு பதிலாக தபேலா, ஹார்மோனியம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கச் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான இத்திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

9 views

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் - ஐநாவில் பேச்சு

நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பின்னர், ஐநா கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

29 views

புதுச்சேரியில் 3 கட்ட உள்ளாட்சி தேர்தல்

புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

"நீட் தேர்வில் மகாராஷ்டிராவுக்கு விலக்கு தேவை"; மகாராஷ்டிரா காங். தலைவர் வலியுறுத்தல் - முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம்

நீட் தேர்வில் இருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.