ஒரு இளைஞன்.. 2 காதலிகள்.. பூவா? தலையா? போட்டி நடத்தி முடிவு
பதிவு : செப்டம்பர் 08, 2021, 09:04 AM
2 பெண்கள்.. ஒரு காதலன்... திருமணம் செய்து கொள்ள அடம் பிடித்த பெண்களை பூவா? தலையா? போட்டு பார்த்து ஊர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிய சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது....
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகாவை சேர்ந்த 2 பெண்கள் ஒரே இளைஞரை காதலித்து வந்துள்ளனர். அந்த இளைஞரும் சளைக்காமல் இவர்கள் 2 பேரையும் காதலித்து வந்துள்ளார். யாரை திருமணம் செய்து கொள்வது என்ற கேள்வி எழுந்த போது தான் பிரச்சினையும் கூடவே கிளம்பியது. காதலனை நான் தான் திருமணம் செய்து கொள்வேன் என 2 பெண்களும் அடம்பிடித்த படி இருக்கவே காதல் பிரச்சினை ஊர் பிரச்சினையாக மாறிப்போனது. ஊர் பெரியவர்கள் இதில் தலையிட்டு சமாதானம் செய்த போதிலும் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்வதாயில்லை... காதலனை கட்டிக் கொள்வதில் தீவிரமாக இருந்த 2 பேரும் ஒரு கட்டத்தில் ஊர் பஞ்சாயத்தினர் முன்பாக வந்தனர்.

அப்போது கிரிக்கெட் போட்டியில் செய்வது போல பூவா? தலையா? போட்டு பார்க்க உள்ளதாகவும், அதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கே காதலனுடன் திருமணம் என கூறவே பெண்களும் சம்மதித்தனர். பின்னர் டாஸ் போட்டு பார்த்ததில் ஒரு பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு காதலனை திருமணம் செய்து வைக்க ஊர் மக்கள் முடிவெடுத்தனர். ஆனால் தோல்வியடைந்த மற்றொரு பெண்ணோ,  தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டல் விடுத்தார். அந்த பெண்ணை அழைத்த மணமகள், பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கட்டத்தில் கட்டியணைத்து அன்பை பொழிந்தார். ஆனாலும் மனம் பொறுக்க முடியாத அந்த பெண், ஒரே நேரத்தில் 2 பேரிடம் காதல் ரூட் விட்ட காதலனுக்கு பளார் என ஒரு அறை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். 

பின்னர் இந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது எந்த வித சலனமும் இன்றி ஜாலியாக இருந்தார் மாப்பிள்ளை. இந்த விவகாரம் போலீசாரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சமரசமான முறையில் இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவரவே போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாயிருக்கிறது....

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

652 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

76 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

35 views

பிற செய்திகள்

கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 45.24 லட்சம்

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 24 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

38 views

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் - வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.

6 views

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் குஜராத் - எப்படி சாத்தியமானது?

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் மாநிலமாக மாறியுள்ளது, குஜராத் மாநிலம்...

8 views

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - ஜி.டி.பியில் 9.2 % பங்களிக்கும் சுற்றுலா துறை

10 views

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

"சித்து, சன்னி இருவருமே கட்சியின் முகம்" - காங். செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா பேட்டி

7 views

கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு

கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான பயிற்சி முகாமை, முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.