யோகாசனம் மூலம் 9 வயது சிறுவன் புதிய சாதனை - 1 நிமிடத்தில் 85 முட்டை உடைத்து கின்னஸ் சாதனை
பதிவு : செப்டம்பர் 07, 2021, 05:01 PM
சூலூரில் 9 வயது சிறுவன் யோகாசனம் மூலம் 1 நிமிடத்தில் 85 முட்டைகள் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வசிக்கும் சித்தேஷ் என்ற 9 வயது சிறுவன், சக்கராசனம் என்ற யோகாவில் 1 நிமிடத்தில் 85 முட்டைகள் உடைத்து புதிய கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். ஏற்கனவே ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மணீஸ் சங்கர்  என்பவர் 1 நிமிடத்தில் 43 முட்டைகளை உடைத்த  சாதனையை முறியடித்து, சித்தேஷ் புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்காக, 3 வருடம் யோகா பயிற்சி பயின்று சாதனை படைத்துள்ளாக தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - பகீர் தகவல்கள்

ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாச்சலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் பணியின்போது , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

10 views

கல்லூரி மாணவி கொலையான சம்பவம் - கொலையாளிக்கு 15 நாட்கள் சிறை

சென்னையில் கல்லூரி மாணவி ஸ்வேதாவை கொலை செய்த ராமச்சந்திரனை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

12 views

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கு - காவல் ஆய்வாளர் வசந்தி ஜாமின் கோரி மனு

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

8 views

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : விபத்தில்லா தீபாவளி - அரசு உறுதி

தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

12 views

மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

9 views

பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.