"பத்திரிகையாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது" - பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 07, 2021, 04:06 PM
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி எழுதுகோல் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி எழுதுகோல் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் சாமிநாதன், சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் ஒரு சிறந்த  பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் கருணாநிதி எழுதுகோல் விருது மற்றும் 5 லட்சம் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தார். இளம்பத்திரிகையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தேசிய அளவில் ஐஐஎம்சி மற்றும் ஆசிய இதழியல் கல்லூரி நிறுவனங்களில் உயர்கல்வி பயிற்சி பெற நிதிஉதவி வழங்கப்படும் எனக் கூறினார். பத்திரிகையாளர்கள் மொழித்திறன், நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க மாவட்ட மற்றும் மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறிய அமைச்சர் சாமிநாதன்,பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்றார்.  மேலும், பணிக்காலத்தில் மரணம் அடையும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் நிதி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

663 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

81 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

41 views

பிற செய்திகள்

தலை தூக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

14 views

தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் - போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தமிழகத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

22 views

உள்ளாட்சி தேர்தல் - 97,831 வேட்பு மனுக்கள் தாக்கல்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்த வேட்பு மனுக்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

36 views

போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு - திமுக சார்பில் வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் திமுக சார்பில் வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்பு மனு தாக்கல்

50 views

"நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவினர் மீது வழக்கு போடுவது, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவது ஆகிய வேலையை தான் 4 மாதமும் திமுக அரசு செய்துள்ளது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

31 views

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை முதல்அமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.