மீண்டும் சூடு பிடிக்கும் மே. வங்க அரசியல் - மம்தா மருமகனிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை
பதிவு : செப்டம்பர் 07, 2021, 03:54 PM
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மம்தா மருமகனுக்கு எதிரான வழக்கு விசாரணையை அமலாக்கப்பிரிவும், பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கு விசாரணையை சிஐடி போலீசாரும் துரிதப்படுத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மம்தா மருமகனுக்கு எதிரான வழக்கு விசாரணையை அமலாக்கப்பிரிவும், பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கு விசாரணையை சிஐடி போலீசாரும் துரிதப்படுத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்தாலும், முதல்வராக இருக்கு மம்தா பானர்ஜி நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார்.மாநிலத்தில் எம்.எல்.ஏ. வாக இல்லாமல் முதல்வராகியிருக்கும் மம்தா பானர்ஜி, பதவியை தொடர வேண்டும் என்றால் நவம்பர் 5- ஆம் தேதிக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.  
இந்நிலையில், மாநிலத்தில் காலியாக இருக்கும் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.இதற்கிடையே மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு  தொடர்பாக விசாரித்துவரும் அமலாக்கப்பிரிவு, மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்துள்ளது.இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியிருக்கும் அபிஷேக் பானர்ஜி, எந்த விசாரணையையும் சந்திக்க தயார், தான் 10 பைசா சட்டவிரோதமாக பெற்றுள்ளேன் என நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாரென கூறியிருக்கிறார்.இதற்கிடையே மேற்கு வங்க சிஐடி போலீசார், பாஜகவை சேர்ந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுப்ரதா சக்ரவர்த்தி மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக விசாரித்துவரும் மேற்கு வங்க மாநில அமைப்பான சிஐடி போலீசார், அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.  ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத அவர், கொல்கத்தா உயர்நீதிமன்றம் சென்று வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாக கூறி கைது செய்ய தடையை பெற்றுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை முகமைகளின் இந்த நடவடிக்கை அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

659 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

38 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்-லைன் முன்பதிவு - பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

11 views

யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - ராஜ்யசபா எம்.பி.யாக செல்வகணபதி தேர்வு?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.

15 views

திருப்பதி கோயில் அறங்காவலர் குழு - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக 52 பேரை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

எரிச்சலூட்டும் ஹாரனுக்கு பதில் இன்னிசை.! - புதிய விதிகளை உருவாக்க திட்டம்

ஹாரன் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்கு பதிலாக தபேலா, ஹார்மோனியம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கச் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான இத்திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

9 views

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் - ஐநாவில் பேச்சு

நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பின்னர், ஐநா கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

29 views

புதுச்சேரியில் 3 கட்ட உள்ளாட்சி தேர்தல்

புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.