கோவிஷீல்டு இடைவெளியை குறைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 07, 2021, 12:02 PM
தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்துவோர் 28 நாள் இடைவெளியில் 2-வது டோசை செலுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்துவோர் 28 நாள் இடைவெளியில் 2-வது டோசை செலுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியில் 2 டோசாக செலுத்தப்பட்டது. இந்த இடைவெளியை மத்திய அரசு, கடந்த மே மாதம் 12 வாரமாக, அதாவது 84 நாட்களாக அதிகரித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு முதல் டோசை செலுத்திவிட்டதாகவும், 2 ஆவது டோசை செலுத்த சுமார் 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி டோஸ்களை ஏற்பாடு செய்துவிட்டதாகவும்,மத்திய அரசின் கட்டுப்பாட்டால் தங்களால் பணியாளர்களுக்கு 2-வது டோசை செலுத்தமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பதிலளித்த மத்திய அரசு, 2 டோசுக்கு  இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கவே இடைவெளி அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை நிராகரித்த உயர்நீதிமன்றம்,வெளிநாடு செல்வோர் இரண்டு டோசுக்கு இடையிலான இடைவெளியை தேர்வு செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் சலுகை வழங்கும் போது, முன்னதாகவே பாதுகாப்பைபெற விரும்பும் இங்கிருக்கும் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏன் இந்த சலுகையை நீட்டிக்க கூடாது எனக் கேள்வியை எழுப்பியது. இதனையடுத்து குறைந்தப்பட்சம் தங்கள் சொந்த செலவில் தடுப்பூசி செலுத்துபவர்கள், 28 நாட்கள் இடைவெளியில் 2-வது டோசை செலுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியை பெற கோவின் செயலி முன்பதிவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி பெறுபவர்கள், தற்போது உள்ளதை போன்று 84 நாள் இடைவெளியில் 2-வது டோசை பெறலாம் எனக் கூறியுள்ளது.




தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

754 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

624 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

31 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

11 views

பிற செய்திகள்

நாளை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது.

9 views

2021ல் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் - மோடி, மம்தா இடம்பிடிப்பு

டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

14 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

11 views

புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

20 views

"ஒரு மணி நேரத்தில் நிபா பாதிப்பு கண்டுபிடிப்பு" - "கருவியின் செயல்பாடு குறித்து தகவல்கள்"

நிபா வைரஸ் பாதிப்பை ஒரு மணிநேரத்தில் கண்டறியும் கருவிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அவசரகால அனுமதி அளித்துள்ளது.

9 views

கர்பா நடனத்தில் அசத்தும் முதியவர்கள் - 60 வயதை கடந்தவர்களின் துள்ளல் நடனம்

நவராத்திரியை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் கர்பா நடனத்தில் வயதான பெண்மணிகள் அசத்தி வருகின்றனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.