4 மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
பதிவு : செப்டம்பர் 07, 2021, 10:46 AM
4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது, ஊட்டி மலை ரயில் சேவை...
மனதை வருடிச் செல்லும் தென்றல் காற்று, வெண்மேகங்கள் தவிழ்ந்து விளையாடும் மலைப்பகுதி,சலசல என சப்தமிடும் நீரோடைகள், பச்சைப்பசேல் என பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள்... இவற்றையெல்லாம் தாண்டி பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குகைகள் வழியாக தவழ்ந்து செல்லும் போது... ஒரு நிமிடம் தங்களையே  மறந்துவிடுகின்றனர்... சுற்றுலா பயணிகள்... 

ஊர்ந்து செல்லும் மலை ரயில் காண்பதற்கே அற்புதமாக கட்சியளிக்க... அதனுள் விரும்பி பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் அனுபவம் முற்றிலும் இயற்கையோடு ஒன்றிணைந்தது... மலைகளின் அரசி... சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி... என உள்ளத்தை கொள்ளை கொண்ட ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது... இந்த அழகிய மலை ரயில்... 

கடந்த 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி தொடங்கிய இந்த ரயில் சேவை... மலைப்பாதையில் உள்ள 208 வளைவுகளில் வளைந்து நெளிந்து செல்லும் காட்சி... காண்போரை பரவசப்படுத்தும்... மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு நீராவி ரயில் என்ஜினும் குன்னூரில் இருந்து உதகைக்கு டீசல் என்ஜினும் இயக்கப்பட்டு வருகிறது.. ஆசியாவிலேயே மிக செங்குத்தான இந்த மலை ரயில் பாதை... கடந்த 2005ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது, யுனெஸ்கோ 

130 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த மலை ரயிலின் பாரம்பரியத்தை எடுத்து கூறும் வகையில், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி ரயில் நிலையங்களில் அமைந்துள்ளது, நீலகிரி மலை ரயில்வே அருங்காட்சியகம். தற்போது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு பதிவுடன் முதல் வகுப்புக்கு 600 ரூபாய் கட்டணமும், இரண்டாம் வகுப்புக்கு 295 ரூபாய் கட்டணமும், 

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு 445 ரூபாயும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இரண்டாம் வகுப்பு190 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட மலை ரயில் சேவை, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தப்படி பயணிக்க தொடங்கிவிட்டனர், சுற்றுலா பயணிகள்...

பிற செய்திகள்

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - பகீர் தகவல்கள்

ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாச்சலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் பணியின்போது , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

11 views

கல்லூரி மாணவி கொலையான சம்பவம் - கொலையாளிக்கு 15 நாட்கள் சிறை

சென்னையில் கல்லூரி மாணவி ஸ்வேதாவை கொலை செய்த ராமச்சந்திரனை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

14 views

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கு - காவல் ஆய்வாளர் வசந்தி ஜாமின் கோரி மனு

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

9 views

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : விபத்தில்லா தீபாவளி - அரசு உறுதி

தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

12 views

மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

9 views

பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.