கடலில் தத்தளிப்பவர்களை காப்பாற்ற குழு - சென்னை காவல்துறை நடவடிக்கை
பதிவு : செப்டம்பர் 07, 2021, 02:47 AM
சென்னையில் கடலில் மூழ்கி தத்தளிப்பவர்களை மீட்க சிறப்பு குழு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சிறப்பு குழு அமைப்பதற்கான காரணம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட 2 வாரங்களில் மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.ஆண்டுக்கு சராசரியாக 90 பேர் வரை அலையில் சிக்கி உயிரிழக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் சூழலில், இதனை தடுக்க "கடற்கரை பாதுகாப்பு குழு" என்கிற சிறப்பு குழுவை அமைக்க சென்னை காவல்துறை தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் மெரினா கடற்கரையில் 25 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழு இயங்கி வருகிறது. 
ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், ஸ்கூபா நீச்சல் வீரர்கள், மிதவை படகு இயக்குபவர்கள் அடங்கிய இந்த குழுவினர், ஜார்ஜ் கோட்டை முதல் பட்டினப்பாக்கம் வரை மெரினா கடற்கரையில் பணியில் ஈடுபடுகின்றனர்.
ரோந்துப்பணி, விழிப்புணர்வு பணியிலும் இந்த குழுவினர் ஈடுபடும் நிலையில், ஆழம் மற்றும் ஆபத்தான பகுதிகள் குறித்த எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இத்தனை நடவடிக்கைகளையும் மீறி கடலில் குளிப்பவர்கள் உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், பன்முகத்தன்மை கொண்ட சிறப்பு குழுவை அமைக்க காவல்துறை தீர்மானித்துள்ளது.இந்த குழுவில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற காவலர்கள், கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறவுள்ளனர்.மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்பு மற்றும் ரோந்துப்பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், கடலில் தத்தளிப்பவர்களுக்கு ட்ரோன் மூலம்  உயிர் காக்கும் கவசம் கொண்டு சேர்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

663 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

81 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

41 views

பிற செய்திகள்

"நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது " - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்றும் இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

16 views

ரிவால்டோ யானை விவகாரம் - வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து,வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

26 views

போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு - அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

நேரடி போட்டி தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

8 views

குழந்தையை அடித்து துன்புறுத்தும் நபர் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

குழந்தையை கையாலும் கயிறாலும் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது..

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.