உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை - அனைத்துக் கட்சி கூட்டம்
பதிவு : செப்டம்பர் 07, 2021, 02:33 AM
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன? பார்க்கலாம்... இந்த தொகுப்பில்...
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நேரத்தை மாலை 7 மணி வரை நீட்டிக்க பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காலத்தை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளை அதிகளவில் அமைக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியது.தேர்தலை அமைதியாகவும், ஜனநாயக முறையிலும் நடத்தி முடிக்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை  புகைப்படத்துடன் வெளியிட வேண்டும் என பாஜக
கோரிக்கை விடுத்தது. தேர்தல் நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய பிறகு தான், தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.இதனிடையே, விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூறிய கருத்துகள் பரிசீலிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

606 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

384 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

55 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

50 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

41 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

9 views

பிற செய்திகள்

எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின் கம்பங்கள் : உடனடி நடவடிக்கை தேவை - பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் கருவக்குடியில் எந்த நேரமும் விழலாம் என்ற அபாயகரமான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 views

10,11ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணை தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11 views

தமிழகத்தில் மேலும் 1,639 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

23 views

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல்

நாளை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

12 views

நாளை நீட் தேர்வு : தமிழகத்தில் ஏற்பாடுகள் எப்படி உள்ளன? கல்வியாளர்கள் கூறுவது என்ன?

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.

16 views

ஓட்டலில் தந்தூரி சாப்பிட்ட சிறுமி பலி - உணவில் நச்சுப்பொருள் கலப்பு என தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டவர்களில் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதோடு, சிறுமி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆரணி முழுவதும் ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.